Home /News /tamil-nadu /

நியூஸ்18 செய்தி எதிரொலி! குளத்தில் சாலை அமைத்தது குறித்து விளக்கமளித்த குடிசை மாற்று வாரியம்

நியூஸ்18 செய்தி எதிரொலி! குளத்தில் சாலை அமைத்தது குறித்து விளக்கமளித்த குடிசை மாற்று வாரியம்

குடிசை மாற்று வாரியம் சார்பில் வைக்கப்பட்டுள் அறிவிப்பு பலகை

குடிசை மாற்று வாரியம் சார்பில் வைக்கப்பட்டுள் அறிவிப்பு பலகை

கட்டுமானப் பொருள்கள் கொண்டு செல்வதற்காக மண்ணைக்கொட்டி சுமார் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
நியூஸ்18 செய்தி எதிரெலியாக கோவை மாவட்டம் குனியமுத்தூரில் குடியிருப்பு கட்டுமான பணிகள் முடிந்ததும் குளத்தில் எவ்வித ஆக்கிரமிப்பும் ஏற்படா வண்ணம் சாலை அகற்றப்படுமென தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் விளக்கமளித்துள்ளது.

கோவை மாவட்டம் குனியமுத்தூரில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் செங்குளம் அமைந்துள்ளது. நொய்யல் நதியில் இருந்து நீர் வரத்து பெறும் இந்த குளத்தால் நேரடியாகவும், மறைமுகமாகவும் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக கழிவுகள் மற்றும் குப்பைகள் பிடியில் சிக்கி கேட்பாரற்று கிடந்த இந்த குளம், அண்மையில் தன்னார்வலர்களின் முயற்சியால் தூர்வாரப்பட்டு புதுப்பொலிவு பெற்றது. இந்நிலையில் குளம் அருகில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இதற்கான கட்டுமானப் பொருள்கள் கொண்டு செல்வதற்காக மண்ணைக்கொட்டி சுமார் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டது. நியூஸ் 18 தமிழ்நாடு இந்த செய்தியை பதிவிட்டு இருந்தது.

Also Read:குளத்தின் நடுவே சாலை அமைத்த குடிசை மாற்று வாரியம்: பொதுமக்கள் புகார்

இந்த செய்தி எதிரெலியாக, குளத்துப்பாளையம் நேதாஜிபுரத்தில் 720 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட பணிக்காக பயன்படுத்தப்படும். இந்த பாதை முற்றிலும் தற்காலிகமானது. பணிகள் முடிவுற்றவுடன் குளத்தில் எவ்வித ஆக்கிரமிப்புகளும் ஏற்படாவண்ணம் மண்முகடுகள் அகற்றப்படும் என கோவை கோட்டம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

Also Watch:  வீடியோ: சேரில் உட்கார்ந்ததற்காக பெண்ணை கடுமையாக தாக்கும் ஓட்டல் உரிமையாளர்!

Published by:Vijay R
First published:

Tags: Coimbatore

அடுத்த செய்தி