முகப்பு /செய்தி /தமிழ்நாடு / செல்ஃபி எடுக்கும்போது ஆற்றில் தவறி விழுந்த புதுமண தம்பதி.. குடும்பத்தாரின் கண்முன்னே நிகழ்ந்த சோகம்

செல்ஃபி எடுக்கும்போது ஆற்றில் தவறி விழுந்த புதுமண தம்பதி.. குடும்பத்தாரின் கண்முன்னே நிகழ்ந்த சோகம்

செல்ஃபியால் நேர்ந்த துயரம்

செல்ஃபியால் நேர்ந்த துயரம்

Groom died கால் தவறி மணமக்கள் இருவரும் ஆற்றுக்குள் விழுந்துள்ளனர். இதைப்பார்த்த குடும்பத்தார் கூச்சலிடவே அப்பகுதி பொதுமக்கள் இருவரையும் மீட்க போராடியுள்ளனர்.

  • Last Updated :

கேரளாவில் சுற்றுலாவுக்கு சென்ற புதுமண தம்பதியினர் செல்பி எடுக்கும் போது நடந்த சோகம். 

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஜானகி காடு என்னும் பகுதியில் உள்ள குற்றியாடி ஆற்றுப்பகுதியில் குடும்பத்தாருடன் புதுமண தம்பதியினர் நேற்றைய தினம் சுற்றுலாவுக்காக வந்துள்ளனர். இந்த நிலையில் சேர்ந்து குடும்பத்தாருடன் செல்பி எடுத்து விட்டு தனியாக புதுமண தம்பதி போட்டோ எடுப்பதற்காக அங்கு உள்ள பாறைகளின் மீது ஏறி செல்பி எடுக்க முயன்றுள்ளனர்.

Also Read: பெண் போலீஸை ஆபாசமாக பேசிய இளைஞர் சென்னையில் கைது

இதில் கால் தவறி மணமக்கள் இருவரும் ஆற்றுக்குள் விழுந்துள்ளனர். இதைப்பார்த்த குடும்பத்தார் கூச்சலிடவே அப்பகுதி பொதுமக்கள் இருவரையும் மீட்க போராடியுள்ளனர். இதில் மணமகள் மட்டும் உயிரோடு மீட்கப்பட்டார்.ஆற்றுச் சுழலில் மாட்டிக்கொண்ட மணமகன் ரஜிலால்  என்பவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் சடலமாக தான் மீட்கப்பட்டார்.

கோழிக்கோடு பாலோரி பகுதியை சார்ந்த ரஜி லாலுக்கும் அவரது மனைவிக்கும் கடந்த மார்ச் 14ம் தேதி திருமணம் நடந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. திருமணமான சில நாள்களில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

top videos

    செய்தியாளர் : சஜயகுமார்

    First published:

    Tags: Crime News, Death, Husband died, Kerala, Newly married couple, Selfie, Selfie death