திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் மர்ம மரணம் - கொலையா? தற்கொலையா?

  • Share this:
திருமணம் ஆன ஐந்தே மாதத்தில் பெண் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்துள்ளார். தற்கொலை என கணவர் கூற, கொலை என பெண்ணின் உறவினர்கள் கூறுகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் பாளையம். இவருக்கும் கல்பாக்கம் அடுத்த கடலூர் கிராமத்தைச் சேர்ந்த நந்தினி என்ற சத்யவாணிக்கும் ஐந்து மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

நந்தினிக்கு 15 சவரன் நகை போட்டு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில், அந்த நகைகள் அனைத்தையும் அவரது கணவர் பாளையம் அடகு வைத்து செலவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.


அடகு வைத்த நகைகளை மீட்டு தரும்படி நந்தினி கேட்டதால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, கணவர் பாளையம் மது அருந்திவிட்டு சென்று நந்தினியை தாக்கி கொடுமை படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை மாலை நந்தினி வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதாக, அவரது கணவர் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார்.

நந்தினியை பரிசோரித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் பயந்துபோன பாளையம், நந்தினியின் உடலை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு, உறவினர்களுக்கு தகவல் சொல்விட்டு, அங்கிருந்து ஓடிவிட்டார்.தகவலறிந்து சென்ற நந்தினியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகக்கூறி, உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச்செல்ல எதிர்ப்பு தெரிவித்து மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை அடுத்து மருத்துவமனை தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற கல்பாக்கம் போலீசார் உறவினர்களை சமாதானப்படுத்தி, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நந்தினியின் உயிரிழப்பு குறித்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்த போலீசார், கணவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
First published: November 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading