திருமணமாகி முப்பதே நாட்களில் இளம்பெண் தற்கொலை: காரணம் என்ன?

Youtube Video

மனதில் வேறு ஒருவர் இருந்ததை அறியாமல், தனக்கு பிடிக்காத ஒருவரை திருமணம் செய்து வைத்த பெற்றோர். ஆனால், சேர்ந்த வாழப்பிடிக்கவில்லை என மகள் தற்கொலை செய்த கொண்ட சோகம் திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

 • Share this:
  திருவேற்காடு, கஸ்தூரிபாய் அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் 25 வயதான ஜெயராமன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார் . ஜெயராமனுக்கும் கொடூங்கையூரை சேர்ந்த சம்பத் என்பவரின் 21 வயதான ரக்சனாவிற்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ரக்சனா தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

  திருமணமாகி ஒரு மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக திருவேற்காடு போலீசார் விசாரணையை தொடங்கினர். ஆர்.டி.ஒ விசாரணையும் தொடங்கியிருந்த நிலையில் திடீர் திருப்பமாக பெண் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தனது தந்தைக்கு அனுப்பிய உருக்கமான வீடியோ வெளியாகியுள்ளது.

  தந்தையின் விருப்பத்திற்காகவே திருமணம் செய்து கொண்டதாக வீடியோவில் தெரிவித்துள்ள ரக்சனா தனது தந்தை கடைசி வரை தன் விருப்பத்தை கேட்கவில்லை என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

  தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று அனைவருக்கும் தெரிந்திருந்தும் தந்தைக்கு மட்டும் அது புரியவில்லை என்று வருத்தத்துடன் பேசியுள்ளார். திருமணத்திற்கு முன்பு ஒருவரை தனக்கு பிடித்திருந்ததாக தெரிவித்துள்ள ரக்சனா அவருடன் வாழ முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

  தனது தந்தையையும் குடும்பத்தையும் மிகவும் பிடிக்கும் என்று வீடியோவில் பேசியுள்ள ரகசனா திருமணம் ஆன நாளில் இருந்து மிகவும் வேதனையில் இருந்ததாவும் பதிவிட்டுள்ளார்.தனது தந்தை கடைசிவரை தன் மனதை புரிந்து கொள்ளவே இல்லை என்று சொல்லும் போதே வீடியோ பதிவு பாதியில் தூண்டிக்கப்படுகின்றது.

  இந்நிலையில் பெண் தந்தைக்கு அனுப்பிய வீடியோ வெளியாகியுள்ள நிலையில் போலீசார் பெண்ணின் தந்தை மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

   

  திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று சொல்லப்படும் சமூகத்தில், திருமணம் செய்து கொள்வது குறித்து பெண்ணின் விருப்பத்தை கேட்க வேண்டியதும் அவசியமாகிறது. ரட்சனாவின் பெற்றோர் இதை செய்திருந்தால், அவர்களது மகள் இப்போது உயிருடன் இருந்திருப்பார் என்றால் மிகையாகாது. அதே சமயம், தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்பதையும் அனைவரும் உணர வேண்டும்.



  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்




  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

  சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
  Published by:Vaijayanthi S
  First published: