ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

உருக, உருக பேசி காதல்... திருமணமான ஒரே மாதத்தில் நகை, பணத்துடன் புது மணப்பெண் ஓட்டம்

உருக, உருக பேசி காதல்... திருமணமான ஒரே மாதத்தில் நகை, பணத்துடன் புது மணப்பெண் ஓட்டம்

 நகை, பணத்துடன் புது மணப்பெண் ஓட்டம்

நகை, பணத்துடன் புது மணப்பெண் ஓட்டம்

தாம்பரத்தில் திருமணம் முடிந்த ஒரே மாதத்தில் வீட்டில் இருந்த நகை, பணத்தை திருடிக் கொண்டு புதுமணப்பெண் தப்பி ஓடி விட்டார். 

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai [Madras], India

  சென்னை மேற்கு தாம்பரம் ரங்கநாதபுரம், பகுதியைச் சேர்ந்தவர்கள் விஜயகுமார் - மேகலா தம்பதி.இவர்களின் மூத்த மகன் நடராஜன் வீட்டருகே உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். அதே பேக்கரியில் பணிபுரிந்த அபிநயா என்ற பெண்ணை நடராஜன் காதலித்துள்ளார். இருவரின் காதல் விவகாரம் நடராஜனின் வீட்டிற்கு தெரியவந்த நிலையில், அவர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

  இதனால் நடராஜன் குடும்பத்தினருடன்  நெருங்கி பழகிய அபிநயா, அடிக்கடி அவர்களின் வீட்டிற்கும் சென்று உணவருந்தி, அனைவரிடமும் நெருங்கி பழகி நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார். குடும்பத்தில் அனைவரின் மனதிலும் இடம் பிடித்த அபிநயாவை, மகனுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அபிநயாவின் பெற்றோர் குறித்த விவரங்களை நடராஜனின் பெற்றோர் கேட்டுள்ளனர். தனது சொந்த ஊர் மதுரை...தான் ஒரு அனாதை என்றும், வயதான ஒருவருக்கு தன்னை திருமணம் செய்து வைக்க உறவினர்கள் முயற்சி செய்ததால் ஊரை விட்டு ஓடி வந்து விட்டேன். சென்னையில் பெண்கள் ஹாஸ்டலில் தங்கி வேலைக்கு சென்று வருவதாக உருக்கமாக கூறியிருக்கிறார் அபிநயா.

  இதைக்கேட்ட நடராஜன் குடும்பத்தினர் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி நடராஜனுக்கும்-அபிநயாவுக்கும் திருமணம் செய்து வைத்தனர். தாம்பரம் ரங்கநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணத்தை முடித்து, அதன் தொடர்ச்சியாக தாம்பரம் காந்தி சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் 4 லட்சம் ரூபாய் செலவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளை விமர்சையாக நடத்தியுள்ளனர். நடராஜன் வீட்டில் இருந்த அபிநயா, கடந்த 19-ம் தேதி காலையில் திடீரென காணாமல் போய்விட்டார்.

  Also Read : நடத்தையில் சந்தேகம் : மனைவியை இரும்பு பைப்பால் அடித்து கொன்ற கணவன் கைது!

  அபிநயாவின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில், அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. மாலையில் பீரோவை திறந்து பார்த்தபோது 17 சவரன் நகைகள், ரூ.20 ஆயிரம் பணம், திருமணத்திற்காக எடுத்த பட்டுப்புடவைகள் ஆகியவற்றையும் காணவில்லை என்பது தெரியவந்தது. அதன் பின்னரே நகை, பணத்தை திருடிக் கொண்டு அபிநயா திட்டமிட்டு ஓடியிருப்பது நடராஜனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தெரியவர அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே தாம்பரம் காவல் நிலையத்தில் அபிநயாவின் புகைப்படத்துடன் புகார் அளித்தனர்.

  நடராஜனின் தாயார் மேகலா கூறும்போது, அபிநயாவை ரொம்ப நல்லப்பெண் என நாங்கள் எல்லோரும் நம்பினோம். குடும்பத்தினர் அனைவரிடமும் அவர் நன்றாக பழகினார். நகை, பணத்தை திருடி செல்வார் என நினைக்கவில்லை என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். நகை, பணத்திற்காக திருமண மோசடியில் ஈடுபட்ட அபிநயாவை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Chennai, Crime News