கார்க் பந்து பட்டு புதுமாப்பிள்ளை உயிரிழப்பு.. நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடியபோது விபரீதம்..
கார்க் பந்து பட்டு புதுமாப்பிள்ளை உயிரிழப்பு.. நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடியபோது விபரீதம்..
திருவள்ளூர் அருகே திருமணமான 4 மாதத்தில் கிரிக்கெட் விளையாட்டின் போது பந்து நெஞ்சில் பட்டதால் புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் கிராமத்தினர் இடையே பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் புன்னப்பாக்கத்தைச் சேர்ந்தவர் தாமோதரன். இவரது மகன் லோகநாதன் ஆந்திர மாநிலம் புத்தூரில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். லோகநாதன் திருவள்ளூர் வள்ளுவர் புரம் பகுதியை சேர்ந்த ராசாத்தி என்பவரை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார் . புதுமாப்பிள்ளை லோகநாதன் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தனது நண்பர்களுடன் ஒதிக்காடு கிராமத்தில் எம்ஜிஆர் நகர் விளையாட்டு மைதானத்திற்கு சென்று விளையாடினர்.
அப்போது மைதானம் அருகில் நின்று கொண்டிருந்த போது வாலிபர் ஒருவர் அடித்த கிரிக்கெட் பந்து லோகநாதனின் நெஞ்சில் பட்டு மயங்கி மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார். இதை கண்டு உடன் விளையாடி கொண்டிருந்த சக நண்பர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே லோகநாதன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
மேலும் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் குறித்து புல்லரம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட லோகநாதன் ஞாயிறு விடுமுறை தினத்தில் விளையாடச் சென்று வேடிக்கை பார்த்தபோது நேர்ந்த துயரச் சம்பவம் அனைவரையும் கண்கலங்க செய்தது.
மேலும், காதல் திருமணம் செய்த புது மாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் திருவள்ளூர் சுற்றுவட்டார கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.