ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வேலூரில் புதுமாப்பிள்ளை தற்கொலை - மாமியாரின் மிரட்டல் காரணமா?

வேலூரில் புதுமாப்பிள்ளை தற்கொலை - மாமியாரின் மிரட்டல் காரணமா?

வேலூரில் புதுமாப்பிள்ளை தற்கொலை : மாமியார் மிரட்டல்தான் காரணமா?

வேலூரில் புதுமாப்பிள்ளை தற்கொலை : மாமியார் மிரட்டல்தான் காரணமா?

வேலுரில் திருமணம் ஆனா 2 மாதத்தில் மனைவி பிரிந்து சென்றதாகவும், மாமியார் அவமானப்படுத்தியதாகவும் கூறி புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  வேலூர் மாவட்டம், கீழ்மொணவூர் அம்மன் நகரைச் சேர்ந்தவர் 30 வயதான அஜய்குமார். கூலி வேலை செய்து வந்தார்.

  சேண்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கவிதா என்பவரின் மகள் அர்ச்சனா வேலூர் மாநகராட்சியில் பணியாற்றி வருகிறார். இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த மே மாதம் 8-ம் தேதி வீட்டிற்கு தெரியமால் ரகசிய திருமணம் செய்தனர்.

  பின்னர் கீழ்மொணவூரில் வாடகைக்கு வீடு எடுத்து தம்பதி இருவரும் வாழ்க்கையைத் தொடங்கினர்.

  திருமணம் ஆன மூன்றாவது நாளே மனைவியின் நடத்தையில் அஜய்குமார் சந்தேகம் ஏற்பட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு அர்ச்சனா தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

  மேலும் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்து தாய் வீட்டில் அர்ச்சனா ஓய்வெடுத்து வந்துள்ளார். அவரை குடும்பம் நடத்த அழைத்தபோது வர மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் காதல் மனைவி தன்னிடமிருந்து விலகிச் செல்வதாக நினைத்த அஜய்குமார் கடந்த ஒரு வாரமாக மாமியார் வீட்டுக்குச் சென்று மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்து வந்துள்ளார்.

  ஆனால் அர்ச்சனாவை அஜய் உடன் அனுப்ப மறுத்ததுடன், மகள் மீது சந்தேகப்பட்டதை மாமியார் கண்டித்துள்ளார்.

  இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அஜய்குமார் சனிக்கிழமை பேனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  தற்கொலைக்கு முன் செஃல்பி வீடியோவைப் பதிவு செய்து தன்னுடைய நெருங்கிய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வாட்ஸ்-அப்பில் அனுப்பியுள்ளார்.

  வீடியோவைப் பார்த்த நண்பர்களும், உறவினர்களும் அஜய்குமாரின் வீட்டுக்குச் சென்று பார்த்த போது அஜய்குமார் தூக்கில் சடலமாகத் தொங்கிக் கொண்டிருந்தார்.

  மேலும் படிக்க...

  தோனி பிறந்தநாள் - உணர்ச்சி பொங்க பாடலை பரிசளித்த பிராவோ

  இதை அடுத்து விரிஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Crime | குற்றச் செய்திகள், Vellore district