Home /News /tamil-nadu /

வீட்டில் கழிவறை இல்லாததால் வாழ மறுத்த பெண்: புதுமாப்பிள்ளை தற்கொலை!

வீட்டில் கழிவறை இல்லாததால் வாழ மறுத்த பெண்: புதுமாப்பிள்ளை தற்கொலை!

  • News18
  • Last Updated :
    வீட்டில் கழிவறை இல்லாததால் புதுப்பெண் வாழ மறுத்ததால், புதுமாப்பிள்ளை உயிரை மாய்த்துகொண்ட விபரீதம் நடந்தேறியுள்ளது.

    சேலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த செல்லதுரை, அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தீபாவை காதலித்து, கடந்த மூன்று நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். திருமணமானது முதல் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மாப்பிள்ளைக்கு அரசு வேலை உள்ளதா? சொந்த வீடு உள்ளதா? ஒரே மகனா? என பெண் வீட்டார் எதிர்பார்க்கும் நிலையில், தீபா எதிர்பார்த்தது என்னவோ, வீட்டுக்குள்ளேயே கழிவறை உள்ளதா என்பதை தான். ஆனால், சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கோட்ட கவுண்டம்பட்டி பகுதியில் உள்ள செல்லதுரையின் வீட்டில் கழிவறை இல்லாததால், தீபா அவரது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

    தீபாவை சமாதானம் செய்து தனது வீட்டுக்கு அழைத்து வரச் சென்ற செல்லதுரையை, கடுமையாக திட்டி, கழிவறை இல்லாத வீட்டில் வாழ முடியாது என்று தீபா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. 10 நாட்களில் கழிவறை கட்டிவிடுவதாக செல்லதுரை செய்த சமாதானத்தையும் தீபா ஏற்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால், மனமுடைந்து தமது வீட்டுக்கு வந்த செல்லதுரை, வீட்டின் அருகே இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

    கிணற்றிலிருந்து செல்லதுரையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பிய போலீசார், இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: Brides Rejects Groom, Groom Suicide, No toilet suicide, Suicide

    அடுத்த செய்தி