Home /News /tamil-nadu /

தமிழ்நாட்டில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநரை திரும்ப பெற வேண்டும் - திருமாவளவன்

தமிழ்நாட்டில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநரை திரும்ப பெற வேண்டும் - திருமாவளவன்

திருமாவளவன்

திருமாவளவன்

தமிழ்நாட்டில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகமான அம்பேத்கர் திடலில் இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு திருமாவளவன், அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, தென்மாவட்டங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்த தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுப்பதாக கூறினார்.

    உளவுத்துறையோடு சுலபமாக தொடர்ப்பில் உள்ள ஒருவரை தமிழக ஆளுநராக வேண்டுமென்றே மத்திய அரசு நியமித்துள்ளது. மத்திய அரசானது இன உணர்வையும், மொழி உணர்வையும் அழிக்கக் கூடிய ஒருவரை ஆளுனராக நியமித்து உள்ளது.

    Also read: சென்னையில் கத்தி முனையில் கல்லூரி மாணவர்களிடம் கைவரிசை.. 6 பேர் கொண்ட கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

    ஜனநாயக முறைப்படி பணியாற்றக் கூடிய ஒருவரை ஆளுனராக பணியமர்த்த வேண்டும் என்ற அவர், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றார். யாரை ஆளுநராக கொண்டு வந்தாலும் அவர்களுக்கு தமிழ்நாட்டில் ஆட்சியை கலைத்து விடும் தெம்பும் திராணியும் கிடையாது.

    சிஏஏ சட்டத்திற்கு எதிராக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது வரவேற்புக்குரியது. அதேபோல் தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பிற்கும் எதிராக தீர்மானம் கொண்டு வரவேண்டும் எனவும் தெரிவித்தார்.

    பெண்களுக்கு எதிராக நடக்க கூடிய பாலியல் வன்முறையில் ஈடுபடுவோரை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும், இதற்கென தனி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென முதல்வருக்கு திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Thirumavalavan, VCK

    அடுத்த செய்தி