கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு பல்வேறு விதிமுறைகள் விதித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடைவிதித்து சென்னை காவல்துறை விதிமுறைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கியுள்ளது.
சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ் புத்தாண்டு கொண்டாட்டம் குறித்து கட்டுப்பாடுகள் மற்றும் வழங்கி உத்தரவிட்டுள்ளார். 2022ம் ஆண்டு புத்தாண்டு பிறப்பதையொட்டி, 31 ம் தேதி அன்று இரவு சென்னை பெருநகரில், பொதுமக்கள் வெளியிடங்களில் ஒன்று கூட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். சென்னை பெருநகரில் அனைத்து மக்களும் புத்தாண்டைக் கொண்டாடும் பட்சத்தில், தற்போதைய கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு. கொரோனா நடத்தை விதிமுறைகளை (Covid Appropriate Behavlour - CAB) கடைபிடித்து, மற்றவர்களின் உணர்வுகள் புண்படாத வகையில் கொண்டாடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பொதுமக்கள். சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை, நீலாங்கரை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள கடற்கரை பகுதிகளில் ஒன்று கூட வேண்டாம் என சென்னை காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
31ம் தேதி அன்று இரவு 9 மணிமுதல் சென்னையில் மெரினா கடற்கரை போர் நினைவுச்சின்னம் முதல் காந்தி சிலை வரையிலான காமராஜர் சாலை மற்றும் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை ஓட்டிய சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடற்கரையை ஒட்டிய சாலைகளான காமராஜர் சாலை, ஆர்.கே.சாலை. ராஜாஜி சாலை, அண்ணாசாலை, ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட சாலைகளில் வாகனங்களை நிறுத்தி புத்தாண்டு கொண்டாட்டங்களை கொண்டாடக் கூடாது எனவும் சென்னை காவல்துறை விடுத்துள்ளது.
குறிப்பாக ஈ.சி.ஆர்., ஓ.எம்.ஆர் சாலைகளிலுள்ள ரிசார்ட்டுகள், பண்ணை வீடுகள், மாநாட்டு அரங்குகள், கிளப்புகள் போன்றவற்றில் புத்தாண்டு வர்த்தக ரீதியாக நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. மேலும், அனைத்து ஓட்டல்களிலும், கேளிக்கை விடுதிகளிலும், பண்ணை வீடுகளிலும், பொது இடங்களிலும் கேளிக்கை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், DJ, இசை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி இல்லை எனவும் மீறினால் நடவடிகை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.
ஓட்டல்கள் மற்றும் தங்கும் வசதியுடைய உணவகங்கள் தமிழக வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. குறிப்பாக ஓட்டல் ஊழியர்கள் அனைவரும் 2 தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனரா என ஓட்டல் நிர்வாகம் என கண்காணித்து உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் உட்பட அனைத்து வழிபாட்டுதலங்களிலும், சம்பந்தப்பட்ட நிர்வாகி அதிகாரிகள், தமிழக அரசின் நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை (SOP) பொதுமக்கள் கட்டாயம் பின்பற்றுகின்றனரா என கண்காணிக்க வேண்டும். மேலும், அங்கு வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தி, அனைத்து நுழைவு வாயில்களிலும் அகச்சிவப்பு (Infra Red) மற்றும் Thermal Scanner கருவிகளை கொண்டு பரிசோதித்து அனுமதிக்க வேண்டும் என சென்னை காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
31 ம் தேதி அன்று இரவு முக்கிய இடங்களில் வாகன சோதனைச் சாவடிகள் அமைத்து, பொதுமக்கள் கூடும் இடங்களை கண்காணித்தும், அனைத்து முக்கிய இடங்களில் ரோந்து சென்றும், கன்னியமற்ற மற்றும் அநாகரீகமான செயல்களிலும் ஈடுபடுவோர். பைக் ரேஸ் மற்றும் அதிவேகமாக வானங்களை இயக்கக்கூடாது மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, New Year, New Year 2022, New Year Celebration