ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மதுகுடித்து விபத்து ஏற்படுத்தினால் பாஸ்போர்ட், வேலை உள்ளிட்டவைகளுக்கு நன்னடத்தை சான்றிதழ் வழங்கப்படாது - சென்னை காவல்துறை எச்சரிக்கை

மதுகுடித்து விபத்து ஏற்படுத்தினால் பாஸ்போர்ட், வேலை உள்ளிட்டவைகளுக்கு நன்னடத்தை சான்றிதழ் வழங்கப்படாது - சென்னை காவல்துறை எச்சரிக்கை

மாதிரி படம்

மாதிரி படம்

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு முக்கிய கட்டுப்பாடுகளை காவல் துறை விதித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

ஒவ்வொரு புத்தாண்டு சமயத்திலும் சென்னையில் மெரினா உள்ளிட்ட பல இடங்களில் ஒன்றுகூடி மக்கள் புத்தாண்டை வரவேற்பார்கள். இந்த நிலையில் வரும் டிசம்பர் 31ஆம் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது அசாம்பவிதங்களை தவிர்க்கும் வகையில் சென்னை மாநகர காவல்துறை தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

அதன்படி சென்னையில் உள்ள 75க்கும் மேற்பட்ட மேம்பாலங்கள் மூடப்படுகின்றன. பைக் ரேஸ் மற்றும் மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்துவோருக்கு பாஸ்போர்ட், வேலை உள்ளிட்டவைகளுக்கு காவல்துறை நன்னடத்தைச் சான்றிதழ் வழங்கப்படாது எனவும் காவல்துறை கூறியுள்ளது.

கிழக்கு கடற்கரை சாலை, அண்ணா சாலை மற்றும் கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கவும் காவல்துறை முடிவு செய்துள்ளது. கேளிக்கை விடுதிகள், ஹோட்டல்கள், சொகுசு விடுதிகளில் அனுமதி இல்லாமல் புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்தக் கூடாது எனவும், புத்தாண்டு கொண்டாட்டங்களை இரவு 1  மணிக்குள் முடிக்க வேண்டும் எனவும் காவல்துறை கூறியுள்ளது.

First published:

Tags: Chennai, Chennai Police, New Year Celebration