புத்தாண்டை கொண்டாட தடை... சென்னையில் நாளை இரவு 10 மணிக்கு நட்சத்திர விடுதி பார்களை மூட உத்தரவு

புத்தாண்டை கொண்டாட தடை... சென்னையில் நாளை இரவு 10 மணிக்கு நட்சத்திர விடுதி பார்களை மூட உத்தரவு

மாதிரிப் படம்

நட்சத்திர ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் உள்ள பார்களை, நாளை இரவு 10 மணிக்கு மேல் திறக்கக்கூடாது என சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

 • Share this:
  சென்னையில் நாளை இரவு 10 மணிக்கு மேல் ஹோட்டல், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுபான பார்களை திறக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

  சென்னையை பொறுத்தவரை புத்தாண்டை வரவேற்க இரவு மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் கூடுவர். நட்சத்திர விடுதிகள், ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டும். இந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

  நட்சத்திர ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் உள்ள பார்களை, நாளை இரவு 10 மணிக்கு மேல் திறக்கக்கூடாது என சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். உணவகங்களும் இரவு 10 மணிக்கு மேல் செயல்பட அனுமதி இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  கடற்கரை சாலையில் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.  சென்னையில் அனைத்து மேம்பாலங்களும் நள்ளிரவில் மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு இரவு 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும், 300 இடங்களில் வாகன சோதனை நடைபெற உள்ளதாகவும் காவல் ஆணையர் மகேஷ்குமார் கூறியுள்ளார்.

  தடை மீறி நட்சத்திர ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள், ரிசார்ட்டுளில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். சாலைகளில் கொண்டாட்டம் மற்றும் பந்தயங்கள் நடந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்


  Published by:Vijay R
  First published: