சிறு, குறு உற்பத்தியாளர்களுக்கு இணையதளம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்!

இணையதளம் தொடக்கம்

உற்பத்தியாளர்களை பெருக்கவும், சிறு குறு தொழில்கள், கைவினை பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்க tacke care international எனும் தனியார் அறக்கட்டளை இணையதள பக்கத்தை உருவாக்கியுள்ளது.

  • Share this:
உற்பத்தியாளர்களை பெருக்கவும், சிறு குறு தொழில்கள், கைவினை பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்க tacke care international எனும் தனியார் அறக்கட்டளை இணையதளத்தை உறுவாக்கியுள்ளது. இதனை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.

கொரோனா முதல் அலையின்போது போடப்பட்ட ஊரடங்கால், சிறுகுறு உற்பத்தியாளர்கள், பெருந்நிறுவனங்கள், கைவினை பொருட்கள் உற்பத்தியாளர்கள் உட்பட பலர் கடும் இன்னலுக்கு உள்ளாகினர். பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மெல்ல மெல்ல மீண்டும் பழைய வளர்ச்சியை நோக்கி சிறு,குறு நிறுவனங்கள் பணியாற்றி வருகின்றன. தற்போது 2வது அலை காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரங்கு அவர்களுக்கு மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கில் தொழில் துறை முற்றிலுமாக முடங்கியுள்ள நிலையில் நடுத்தர தொழில் முனைவோர், சுய உதவிக்குழு, கைவினை பொருட்களை தாரிப்பு போன்றவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உற்பத்தியான பொருட்களை சந்தைப்படுத்த முடியாமல் சிறுகுறு நிறுவனங்கள் திணறி வருகின்றன.

இந்நிலையில் மகளிர் சுய உதவிக்குழு மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், குடிசை தொழில், சிறுகுறு நிறுவனங்களின் தயாரிப்புகளை கட்டணமில்லாமல் ஆன்லைனில் சந்தைப்படுத்த வசதியாக தனியார் தொன்டு நிறுவனம் ஒன்று அதற்கான இணையதளத்தை  உருவாக்கியுள்ளது. இதனை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

சேவை மணப்பான்மையோடு தொடங்கப்பட்டிருக்கும் tackecareinternational.org எனும் இணையதளத்தில் கட்டணமில்லாமல் இணைந்து  சிறு,குறு உற்பத்தியாளர்கள், தங்கள் தாயரிப்புகளை சந்தைபடுத்திகொள்ளலாம்

விற்பனையாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இணைப்பு புள்ளியாக செயல்படும் இந்த இணையதளம் சிறுகுறு உற்பத்தியாளர்களுக்கு பெரிதும் உதவும்.

எளிய மக்களை கை தூக்கிவிடும் நோக்கொடும், தொழில் முனைவோருக்கு உதவும் இலக்கோடும் இணையதளம் பணிக்குமேயானால் தொழில் முனைவருக்கு இது வரப்பிரசாதமாகவே அமையும் என வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

 
Published by:Murugesh M
First published: