சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கட்டிகுளம் கிராமத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த புதிதாக ஊருணி தோண்டும் பணி தொடங்கியது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கட்டிகுளம் கிராமத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த புதிதாக குளம் தோண்டும் பணி தொடங்கியது. கட்டிகுளம் கிராம கண்மாய்க்கு வைகை ஆற்றில் இருந்து வரத்து கால்வாய் உள்ளது.
வைகை ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் கண்மாய் வறண்டு காணப்படுகிறது. இக்கண்மாயை நம்பி சுற்றுவட்டாரத்தில் ஆயிரம் ஏக்கர் பாசனம் நடைபெறுகிறது. மழை இல்லாவிட்டடாலும் மோட்டார் பம்ப்செட் மூலம் கிணற்று தண்ணீர் மூலம் விவசாயம் நடந்து வந்தது. கடும் வறட்சி காரணமாக ஆழ்துளை கிணறுகளும் வறண்டதை அடுத்து நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்க கட்டிகுளம் இராமலிங்கம் கோவில் முன்புறம் குளம் தோண்ட முடிவு செய்யப்பட்டு பூமி பூஜை நடந்தது.
ஒரு கோடி ரூபாய் செலவில் 126 அடி நீள, அகலத்திலும் 10 அடி ஆழத்திலும் ஊரணி உருவாக்கப்படுகிறது. மழை நீர் குளத்திற்கு வரும் வகையில் வடிகால்களும் உருவாக்கப்படுகிறது. குளத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு நான்கு புறமும் படிக்கட்டுகளும் அமைக்கப்படுகிறது.
மழை காலங்களில் ஊரணியில் சேகரிக்கப்படும் தண்ணீரின் மூலம் சுற்றுவட்டார கிணறுகளில் நீர்மட்டம் உயர வாய்ப்புண்டு. விவசாய தேவைக்காக தோண்டப்படும் குளத்திற்கு பூமி பூஜைகள் சமுக ஆர்வலர் பாலசுப்ரமணியன் தலைமையில் நடந்தது. கிராமமக்கள் பலரும் விழாவில் பங்கேற்றனர். இன்னும் மூன்று மாத காலத்திற்குள் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனிடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர் அதன் படி இந்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
Also see...
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.