Home /News /tamil-nadu /

ஆழ்துளைக் கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்கும் புதிய கருவி: நெல்லை பொறியாளர் கண்டுபிடிப்பு!

ஆழ்துளைக் கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்கும் புதிய கருவி: நெல்லை பொறியாளர் கண்டுபிடிப்பு!

பொறியாளர் பகவதி பவித்ரன்

பொறியாளர் பகவதி பவித்ரன்

ஆழ்துளைக் கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க புதிய கருவியை நெல்லையைச் சேர்ந்த பொறியாளர் பகவதி பவித்ரன் கண்டுபிடித்துள்ளார். இதன் மூலம் 200 அடி ஆழத்தில் குழந்தை இருந்தாலும் காப்பாற்றமுடியும் என அவர் கூறியுள்ளார்.

தண்ணீருக்காக சுமார் 100 அடி முதல் 700 அடி வரை ஆழ்துளைக் கிணறுகள் போடப்படுகின்றன. இதில் தண்ணீர் கிடைக்காத ஆழ்துளைக் கிணறுகள் சரியாக மூடப்படாமல் பிஞ்சுகளின் உயிர் வாங்கும் எமனாக மாறுவது தொடர்கதையாகி வருகிறது. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 12 குழந்தைகள் இதுபோன்ற ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்துள்ளன. அதில் 3 குழந்தைகள் மட்டுமே நல்வாய்ப்பாக உயிர் தப்பிய நிலையில் திருச்சி சுஜித் உள்ளிட்ட 9 குழந்தைகள் இறந்துவிட்டன.

ஆழ்துளைக் கிணறுகளில் சிக்கி குழந்தைகள் உயிரிழப்பதைப் பார்த்து வேதனை அடைந்த நெல்லை பொறியாளர் பகவதி, அல்லும் பகலும் அயராது உழைத்து புதிதாக ஒரு கருவியை வடிவமைத்துள்ளார்.

சிலிண்டர் போன்ற அமைப்புடன் இயங்கும் இந்தக் கருவியில் உள்ள கேமரா குழந்தையின் இருப்பிடத்தைக் கண்டறிய உதவுகிறது. இதனுடன் இணைக்கப்பட்டுள்ள சங்கிலி போன்ற அமைப்பால் 200 அடி ஆழத்தில் உள்ள 35 கிலோ எடை கொண்ட குழந்தையையும் தூக்கமுடியும் என்கிறார் பகவதி பவித்ரன்.

கடந்த 2002-ஆம் ஆண்டு சிறிய அளவில் தான் உருவாக்கிய ஆழ்துளை மீட்புக் கருவியை, புதிய தொழில்நுட்பத்துடன் மகன் மேம்படுத்தியுள்ளதாகக் கூறும் பகவதியின் தந்தை சிவபாலன். மகனின் கண்டுபிடிப்புகளைப் பரிசோதித்து அரசு அங்கீகாரம் வழங்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். ஆழ்துளைக் கிணறு அமைக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பது மட்டுமல்லாமல், இதுபோன்ற கண்டுபிடிப்புகள் சிக்கல்களை தீர்க்க உதவுமா என்பதை அரசு ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும்.

Also see:
Published by:Rizwan
First published:

அடுத்த செய்தி