Home /News /tamil-nadu /

மதுரையில் பயணிகளின் வெப்பநிலை மற்றும் டிக்கெட்டை பரிசோதனை செய்ய புதிய முறை அறிமுகம்

மதுரையில் பயணிகளின் வெப்பநிலை மற்றும் டிக்கெட்டை பரிசோதனை செய்ய புதிய முறை அறிமுகம்

ரயில் (கோப்புப்படம்)

ரயில் (கோப்புப்படம்)

மதுரையில் பயணிகளின் வெப்பநிலை மற்றும் டிக்கெட்டை பரிசோதனை செய்ய புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
கொரோனா தொற்றை தடுக்க தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பயணிகளின் உடல் வெப்பநிலை, பயணச்சீட்டு, அடையாள அட்டை ஆகியவற்றை தொடாமலேயே பரிசோதிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வரக்கூடிய நிலையில் ரயில் சேவை ஒரு சில பகுதிகளில் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக செங்கல்பட்டு துவங்கி திருச்சி வரையிலான வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது

ஆனால் ஒரு மண்டலத்தில் இருந்து இன்னொரு மண்டலத்திற்கு செல்ல வேண்டுமென்றால் தமிழக அரசு வழங்கும் இ பாஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இந்த இ பாசை ரயில் நிலையத்தில் பணியாற்றும் பரிசோதகர்கள் கையில் வைத்து பார்வையிட வேண்டிய நிலை இருந்தது.

Also see:

இதன் மூலம் தொற்று பரவக்கூடிய அபாய நிலை ஏற்பட்டிருந்தது இதனை தடுக்கும் விதமாக தற்பொழுது சென்னை மற்றும் மதுரை கோட்டத்தில் தொடாமலேயே டிக்கெட்களை சரிபார்க்கும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. இதே போல உடலின் வெப்பத்தை கணினிமூலம் கண்டறிந்து உள்ளே அனுமதிக்க கூடிய வசதியும் உள்ளது.

தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய ரயில் நிலையங்களுக்கு தெற்கு ரயில்வே சார்பில் தொடாமலேயே டிக்கெட்டுகளை பார்க்கும் இயந்திரங்கள் நடைமுறைக்கு வர உள்ளதால் ரயில் நிலையத்தில் ஆபத்தான நிலையில் பணியாற்றக்கூடிய ரயில்வே ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Published by:Rizwan
First published:

Tags: CoronaVirus, Madurai

அடுத்த செய்தி