முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வாகன ஓட்டிகளுக்கும், போக்குவரத்து போலீசாருக்கும் இடையே தொடர்கதையான தகராறு... அபராதம் விதிக்கும் முறையில் மாற்றம் கொண்டுவந்த சென்னை போலீஸ்

வாகன ஓட்டிகளுக்கும், போக்குவரத்து போலீசாருக்கும் இடையே தொடர்கதையான தகராறு... அபராதம் விதிக்கும் முறையில் மாற்றம் கொண்டுவந்த சென்னை போலீஸ்

கோப்புப்படம்

கோப்புப்படம்

வாகன ஓட்டிகளுக்கும், போக்குவரத்து போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்படுவதைத் தடுக்கும் விதமாக அபராதம் விதிக்கும் முறையில், புதிய மாற்றத்தை சென்னை காவல் துறை எடுத்துள்ளது.

  • Last Updated :

வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் முறையில் கொண்டுவரப்பட்ட மாற்றம் தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் போக்குவரத்து போலீசார் லஞ்சம் வாங்காமல் இருக்க அபராதத் தொகையை, டிஜிட்டல் முறையில் வசூலிக்கும் நடைமுறையை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அமல்படுத்தினார். இருப்பினும், வாகன ஓட்டிகளுக்கும், போக்குவரத்து போலீசாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Also read: இரண்டாவது தலைநகர்... புள்ளி வைத்தால் கோலம் போடுபவர் முதலமைச்சர் - அமைச்சர் செல்லூர் ராஜு

top videos

    மேலும், இதற்குத் தீர்வாக புதிய நடைமுறையை சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் அவர்கள் அமல்படுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவல்லிக்கேணி போக்குவரத்து உதவி கமிஷனர் புருஷோத்தமன் கூறியதாவது, ”சென்னையில் தடை விதிக்கப்பட்ட இடங்களில், சிலர் அடாவடியாக, தங்களது வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர். அவ்வாறு விதிமீறி நிறுத்தப்படும். வாகனங்கள் மீது போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் அபராதம் விதித்து, அதற்கான ரசீதை, சம்பந்தப்பட்ட வாகனத்தின் மீது ஒட்டிச் செல்வார்கள் இதனால், வாகன ஓட்டிகளுக்கும், போக்குவரத்து போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்படுவது தடுக்கப்படும்” என்றார்.

    First published:

    Tags: Chennai Police, Traffic Police