கல்விக் கொள்கை கூறுகளை அடிப்படையாக கொண்டு, பாடச்சுமையைக் குறைக்கும் ஒரு பகுதியாக, ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தப்பையின் சுமை, மாணவ மாணவியர்களின் எடையில் 10% மட்டுமே புத்தகப்பையின் எடை இருக்க வேண்டும் என மத்திய கல்வி அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
கல்விக் கொள்கையின் அடிப்படையில், சர்வதேச ஆய்வு மற்றும் இத்துறையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், ஒன்றாம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கு, புத்தகப்பையின் சுமை அவர்களின் உடல் எடையில் 10 சதவிகிதம் மட்டுமே இருக்கவேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், புத்தகப் பைகள், சரியான உள்ளடகப் பிரிவுகளுடன், சரியான ஸ்ட்ராப்புகளுடன், குறைவான எடையில் அமைந்திருக்கவேண்டும் எனவும், சக்கரம் வைத்த ட்ராலி போன்ற பைகள் இருக்கக்கூடாது எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் தரமான, சுத்தமான குடிநீர் வழங்கப்படவேண்டும் எனவும், புத்தகப்பையின் எடையை பார்ப்பதற்கான டிஜிட்டல் இயந்திரங்கள் வைக்கப்படவேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் அளிக்கக்கூடாது எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மூன்று முதல் 6-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 2 மணிநேரம் எழுதுமளவுக்கான வீட்டுப்பாடங்கள் மட்டுமே வழங்கப்படவேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.