கொரோனா நோய்தொற்றால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய நவீன ரோபோ

கொரோனா நோய்த்தொற்றினால் ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி பணியாளர்களின் பாதிக்கப்படாமல் இருக்க திருச்சியை சேர்ந்த தனியார் ரோபோடிக்ஸ் தயாரிப்பு நிறுவனம் பள்ளி மாணவர்களின் உதவியுடன் புதிய ரோபோவை உருவாக்கியுள்ளது.

கொரோனா நோய்தொற்றால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய நவீன ரோபோ
தானியங்கி ஸ்டெரெக்சர்
  • Share this:
கொரோனா நோயினால் உலகம் முழுவதும் பலர் உயிரிழந்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இறந்த உடல்களுக்கு சடங்குகள் மற்றும் மரியாதை செய்வது தமிழர்களின் கலாச்சாரத்தில் மிக முக்கியமான ஒரு அங்கமாக உள்ளது. இதனால், கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை பாதுகாப்புடன் அடக்கம் செய்யும் பணியில் ஈடுபடும் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.

உலகின் முதல் உடல்களை நல்லடக்கம் செய்யும் தானியங்கி ரோபோ, அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களையும் இந்த ஆராய்ச்சியில் இணைத்து திருச்சியை சேர்ந்த *ஜாஃபி ரோபோட்ஸ் (ZAFI Robots)* என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்தத் தானியங்கி ரோபோவானது 150 கிலோ எடை வரை கொண்ட இறந்த உடலை தாங்கக் கூடிய வகையிலும், ஆம்புலன்ஸ்களில் எளிய முறையில் தானாக ஏறவும் இறங்கவும் மற்றும் இடுகாடுகளில் உள்ள சமனற்ற சாலைகளில் எளிமையாக செல்லும் அளவிற்கு இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, கொரோனா நோய்தொற்றில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்குவதற்காக இதே நிறுவனம் தானியங்கி ரோபோவை உருவாக்கி, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.


குறிப்பாக சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையிலும் கொரோனா வார்டில் உள்ள நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள், உணவுகளை வழங்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து அமரர் ஊர்தி பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்விதமாக புதிய வகை ரோபோவானது உருவாகிவருகிறது.

இந்த ரோபோவானது முழுக்க முழுக்க ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி பணியாளர்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். மேலும், இந்த நிறுவனம் கொரோனா தொற்று காலகட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினருக்கு  உதவும் வகையில் ஜாஃபி‌ என்ற பல்வேறு தானியங்கி ரோபோக்களை உருவாக்கி அதனை பயன்பாட்டிற்கு இலவசமாக கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ரோபோட் ஸ்ட்ரெச்சர் வடிவம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில் இதன் முழு வடிவமானது இன்னும் சில தினங்களில் அறிமுகம் செய்ய உள்ளதாக அந்த நிறுவனத்தின் முதன்மை அதிகாரி கூறியுள்ளார்.

வரும்திங்களன்று திருச்சி மாவட்ட ஆட்சியரின் முன் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது. இதன் பிறகு சுகாதாரத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று மருத்துவமனைகளில் இலவசமாக செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.

இதுபோன்று, பணியாளர்களின் நலன் கருதியும் அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதில் இதுவும் ஒரு முன்னோடி திட்டமாகவும் திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
First published: June 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading