Home /News /tamil-nadu /

வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்

வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்

விமான நிலையம்

விமான நிலையம்

ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாடுகளில் இருந்து வரும் விமானப் பயணிகளுக்கான புதிய கட்டுப்பாடுகள் நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்துள்ளன.

    தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் இதுவரை சீனா, ஐரோப்பா, நியூசிலாந்து, வங்கதேசம், சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளில் பரவியுள்ளது. அதனால், தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்களுக்கு குறிப்பிட்ட 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான புதிய கட்டுப்பாடுகள் நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்துள்ளன.

    இந்தப் பயணிகள் அனைவருக்கும் ஆர்டி - பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு, முடிவுகள் வரும் வரை சுமார் 6 மணி நேரம் விமானநிலையத்திலேயே தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்களை மற்ற விமானப் பயணிகளுடன் சேர விடாமல் தனிமைப்படுத்துவதற்காக சென்னை விமான நிலையத்தில் புதிய வருகைப் பகுதி பயன்படுத்தப்படுகிறது. தனிமைப்படுத்தப்படுபவர்களுக்கு விமான நிலையங்கள் சார்பில் உணவு, இலவச வைஃபை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

    Also Read : ஒமிக்ரான் அச்சுறுத்தல்: இந்தியாவில் விரைவில் 3வது டோஸ் தடுப்பூசி?

    விமானங்களில் இருந்து நாற்பது நாற்பது பயணிகளாக இறக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதேபோல் 6 மணி நேர தனிமைப்படுத்துதல் முடிந்த பிறகும், குழு குழுவாகவே பயணிகள் வெளியில் அனுப்பப்படுகின்றனர். இவை அனைத்தையும் மேற்பார்வையிட தமிழக மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், அந்தந்த விமான நிலையங்களுக்கு தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் நடத்தப்பட்ட சோதனையில், ஒமைக்ரான் வைரஸ் அறிகுறி யாருக்கும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Chennai Airport, Omicron

    அடுத்த செய்தி