தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளை மேம்படுத்தும் விதமாக புதிய கட்டிடங்கள் கட்ட முடிவுசெய்து அதற்கான மாதிரி வரைபடத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில், ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதார்களுக்கு அரிசி இலவசமாகவும், துவரம் பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்டவை குறைந்த விலையிலும் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் ரேஷன் கார்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் முக்கியமான ஒன்றாகும்.
தமிழகம் முழுவதும் சுமார் 34 ஆயிரத்திற்கும் அதிகமான நியாயவிலைக்கடைகள் செயல்பட்டு வருகிறது. ஆனால் பல கடைகள் சொந்த கட்டிடங்கள் இல்லாமல் இருப்பதால் போதிய இடவசதி இல்லாமல் ஊழியர்கள் தவித்து வருகின்றனர். ரேஷன் பொருட்களை பாதுகாப்பாக வைக்க முடியாமல் இருப்பதால் பல இடங்களில் திருட்டு சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. இதனால் ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டி தர வேண்டும் என்பது ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.
புதிய ரேஷன் கடைகளின் கட்டிட வடிவமைப்பு
அதன்படி தற்போது தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கு படிப்படியான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி புதிய ரேஷன் கடைக்கான கட்டிடத்தின் மாதிரி புகைப்படத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஸ்டைலான லுக்கில் போதுமான இடவசதி உடன் உள்ள ரேஷன் கடைகளின் மாதிரி புகைப்படம் மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ration Shop