ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Ration Card : புதிய ரேஷன் கார்டு சிக்கல் தீர்வு... விண்ணப்பிப்பது எப்படி?

Ration Card : புதிய ரேஷன் கார்டு சிக்கல் தீர்வு... விண்ணப்பிப்பது எப்படி?

ரேஷன் கார்டு

ரேஷன் கார்டு

புதிய குடும்ப அட்டை அச்சிடும் பணியை மேற்கொள்வதற்கும் மற்றும் கைவிரல் ரேகைப் படிப்பினையும் மீள செயல்முறைப்படுத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :

  தமிழகத்தில் புதிய குடும்ப அட்டை ஒப்புதல் அளிக்கும் சேவைக்கு நாளைக்கு முதல் அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிப்பது எப்படி என்பதையும் பார்க்கலாம்.

  புதிய ரேஷன் கார்டு நாளை முதல் வழங்குவதற்கான அனுமதி தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய மின்னணு குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்த மனுக்கள், அரசால் அறிவிக்கப்பட்ட கொரோனா நிவாரணத் தொகை மற்றும் 14 மளிகைப் பொருட்களின் தொகுப்பு வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்ட நிலையிலும், புதிய மனுக்களை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு கோர வேண்டிய நிலை ஏற்படும் என்பதாலும், கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக களப்பணியாளர்களால் விசாரணைக்கு செல்ல இயலாத சூழ்நிலை காரணமாகவும், தகுதியான மனுக்களை ஒப்புதல் அளிப்பதற்கான சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

  தற்போது நிவாரண உதவித் தொகை 98.59 சதவீதமும் மற்றும் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு 93.99 சதவீதம் வரை வழங்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் முழுவதுமாக விநியோகம் முடிக்கப்படும் நிலையில் உள்ளதால், 01.07.2021 முதல் புதிய குடும்ப அட்டை ஒப்புதல் அளிக்கும் சேவை, புதிய குடும்ப அட்டை அச்சிடும் பணியை மேற்கொள்வதற்கும் மற்றும் கைவிரல் ரேகைப் படிப்பினையும் மீள செயல்முறைப்படுத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் செய்வது எப்படி?

  புதிய ரேஷன் கார்டு உங்களுக்கு வேண்டுமெனில் மற்ற எந்த குடும்ப அட்டையிலும் உங்களது விவரம் இடம் பெற்றிருக்க கூடாது. நீங்கள் மற்ற ரேஷன் கார்டில் உறுப்பினராக இருந்தால் அதிலிருந்து நீக்கம் செய்த பின்பே புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.

  நீங்கள் https://tnpds.gov.in/ என்ற இணையதளத்தினை லாகின் செய்யவும். அதில் மின்னணு அட்டை சேவைகள் என்பதன் கீழ், மின்னணு அட்டை விண்ணபிக்க என்பதை கிளிக் செய்யவும்.

  அதில் புதிய அட்டைக்கான விண்ணப்பம் என்பதை கிளிக் செய்யவும். அதன் பிறகு Name of family head என்ற பாக்ஸின் கீழ், ஆங்கிலத்திலும், தமிழிலும் பெயரை சரியாக பதிவிட வேண்டும்.

  அதன் பிறகு மற்ற விவரங்களை கொடுக்க வேண்டும். குறிப்பாக முகவரி, மாவட்டம், தாலுகா, கிராமம், அஞ்சல் குறியீடு, உங்களது மொபைல் எண், மெயில் ஐடி போன்றவற்றில் எந்த தவறும் செய்யாமல் சரியாக பதிவேற்ற வேண்டும்.

  Also Read : ரேஷன் கார்டில் உங்கள் முகவரியை மாற்ற வேண்டுமா? ஆன்லைனில் மாற்றலாம்!

  அதோடு அப்ளிகேஷனில் குடும்ப தலைவருக்கான புகைப்படம் என்ற இடத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இது 5 எம்பி அளவில் இருக்க வேண்டும்.

  இதன் பிறகு அட்டை தேர்வு என்ற பாக்ஸில் என்ன அட்டை வேண்டும் என்பதை கிளிக் செய்யவும்.

  கடைசியாக ஸ்கேன் செய்து ஆதாரினை அப்லோட் செய்ய வேண்டும். அப்லோட் செய்த பிறகு உறுப்பினர் சேர்க்கை சேமி என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.

  எரிவாயு இணைப்பு பற்றிய விவரங்கள் என்பதன் கீழ், உங்களது கேஸ் இணைப்பு பதிவு செய்யப்பட்ட நபரின் பெயர் கொடுக்க வேண்டும். அதாவது கேஸ் இணைப்பு யார் பெயரில் உள்ளது, எத்தனை இணைப்பு உள்ளது என்பதையும் கொடுக்க வேண்டும்.

  அதில் குடும்ப விவரங்களை முழுமையாக பதிவிட்டு, ஆதார் கார்டினை பதிவேற்றம் செய்ய வேண்டும். 5 வயதிற்குட்பட்ட குழந்தை எனில் பிறப்பு சான்று கொடுத்தால் போதுமானது. அதனையும் பதிவேற்றம் செய்து, உறுப்பினர் சேர்க்கை சேமி என்பதை கிளிக் செய்து சேவ் செய்து கொள்ளலாம்.

  அதன் பிறகு உங்கள் விவரங்கள் சரியானதா என்பதை பார்த்து, பதிவு செய் என்பதை கொடுங்கள். நீங்கள் கொடுத்த விவரத்தில் ஏதேனும் தவறு இருந்தால், அது ரெட் கலரில் காண்பிக்கும். இதை சரியாக கொடுத்து பதிவு செய்யுங்கள். அதன்பிறகு நீங்கள் கொடுத்த விவரங்கள் சரியானவை எனில் உறுதிசெய் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.

  Also Read : மளிகை தொகுப்பு தொடர்பாக முக்கிய உத்தரவு - ரேஷன் அட்டைதாரர்கள் ஹேப்பி

  அதன் பிறகு உங்களது மின்னணு அட்டை விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்பிக்கப்பட்டது என வரும். அதில் குறிப்பு எண்ணும் வரும். அதனை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதனை வைத்து தான் உங்களது கார்டின் நிலையை அவ்வப்போது பார்க்க முடியும். இதனை கொடுத்த பிறகு உங்களது ஆதார் கார்டு, போட்டோ, அப்ளிகேஷன் உள்ளிட்டவற்றை தாலூகா அலுவலகத்தில்(TSO) கொடுக்க வேண்டும். ஏனெனில் விரைவில் உங்களது அப்ளிகேஷன் விரைவில் பரிசீலிக்கப்படும்.

  இதே இணையத்தில் முகப்பு பக்கத்தில் உங்களது விண்ணப்பத்தின் நிலையை பார்த்துக் கொள்ள முடியும். நீங்கள் விண்ணப்பித்த பிறகு ஆவண சரிபார்ப்பு, துறை சரிபார்ப்பு, தாலுகா வழங்கல் அதிகாரியின் ஒப்புதல் என பல வழிமுறைகள் உண்டு. அதன்பிறகே உங்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்கும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Ration card