d
ரேஷன் கார்டு என்பது ஒரு நபரின் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். இது குடியுரிமைக்கான சான்றாகவும் இருக்கிறது. கூடுதலாக, ரேஷன் கார்டு உணவு பொருட்களை வாங்கும் ஆவணமாகும். ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கோதுமை, அரிசி, சர்க்கரை மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை குறைந்த விலைக்கு பெற முடியும்.
ஆனால் ரேஷன் கார்டை பெறுவதற்கான நடைமுறை சிக்கலானதாகவும், நேரத்தை எடுத்துக்கொள்ளும் வகையிலும் உள்ளது. இதனால் பலரும் புதிய ரேஷன் கார்டிற்கு விண்ணப்பிக்காமல் இருந்தனர். தற்போது ஆன்லைனில் எளிதாக ரேஷன் கார்டு பெற முடியும் என்பதால் பலர் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்து வருகின்றனர்.
தமிழக அரசின் அறிவிப்பின்படி புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்து 15 நாட்களுக்குள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. புதிய ரேஷன் கார்டு அச்சிடப்பட்ட உடன் உங்கள் மொபைலில் குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதன்பின் உரிய அலுவலங்களுக்கு அனுப்பப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
வேகமாக பரவும் கொரோனா.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுத்த எச்சரிக்கை!
புதிய ரேஷன் கார்டை அலுவலகத்தில் பெறுவதில் சிக்கல் இருந்து வருவதாக பலர் புகார் தெரிவித்து வந்தனர். பயனாளிகளுக்கு குறிப்பிட்ட அலுவலகத்தில் கொடுக்காமல் வேறொரு இடங்களில் தரப்படுவதால் நேரம் விரையமாகிறது. மேலும் அலுவலகத்திற்கு செல்பவர்கள், வயதானவர்களுக்கு இது பெரும் சிரமமாக இருந்து வந்தது.
இதனால் அச்சிடப்பட்ட புதிய ரேஷன் கார்டை, பயனாளிகளின் வீடுகளுக்கு அஞ்சலில் அனுப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி புதிய ரேஷன் கார்டை ஆன்லைனில் விண்ணப்பம் செய்யும் போதே அஞ்சலில் அனுப்பும் முறையை தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே அஞ்சல் மூலம் புதிய ரேஷன் அட்டை உங்கள் வீடு தேடி வரும்.
அதன்படி அஞ்சல் கட்டணமாக ரூ.25 மற்றும் நகல் கட்டணம ரூ.20 என சேர்த்து மொத்தம் 45 ரூபாயை நீங்கள் ஆன்லைனில் செலுத்த வேண்டும். புதிய ரேஷன் அச்சிடப்பட்ட நீங்கள் குறிப்பிட்ட முகவரியில் அஞ்சல் மூலமாக உங்கள் வீட்டுக்கே வந்து சேரும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.