Home /News /tamil-nadu /

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் வழக்கு..

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் வழக்கு..

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

OPS : வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவிற்கு தடைகோரி ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதிமுகவில் ஒற்றைத்தலைமை சர்ச்சை நீடித்துவரும் நிலையில், சென்னையில் கடந்த மாதம் 23-ம் தேதி நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருந்தது. ஆனால், பொதுச் செயலாளர் பதவியை உருவாக்குவதற்கான தீர்மானம் இல்லாததால், அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    நிரந்தர அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டதுடன், பொதுக்குழு கூட்டத்தை மீண்டும் 11-ஆம் தேதி நடத்த முடிவுசெய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

    இதனை விசாரித்த நீதிபதிகள், அதிமுக பொதுக் குழு விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்தனர். எனினும், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இந்நிலையில், பொதுக்குழு கூட்டத்துக்கான அழைப்பிதழை தலைமைக் கழக நிர்வாகிகள் மூலம் அனுப்பி, கூட்டத்தை திட்டமிட்டபடி நடத்த இபிஎஸ் தரப்பு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில்,  வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவிற்கு தடைக்கோரி ஓ.பன்னீர்செல்வம் சார்பில் இன்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு முறையீடு செய்யப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, நாளை இந்த வழக்கை விசாரிக்க ஒப்புதல் வழங்கியுள்ளார்.

    Must Read : அதிமுகவில் பூகம்பத்தை கிளப்ப காத்திருக்கும் எம்ஜிஆரின் உயில்!

    அந்த மனுவில், வரும் 11ஆம் தேதி பொதுக்குழு நடைபெறவுள்ளதாக நேற்று மாலை தான் தங்களுக்கு நோட்டீஸ் வந்ததாக குறிப்பிட்டுள்ள ஓபிஎஸ் தரப்பு, பொதுக்குழுவுக்கான நோட்டீஸ் 15 நாட்களுக்கு முன்பாக வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: ADMK, Chennai High court, EPS, OPS

    அடுத்த செய்தி