தாம்பத்திய உறவுக்கு வராத புதுமணப்பெண் கொடூர கொலை.... நாடகமாடிய கணவர் கைது

திருமணமாகி இதுவரை தாம்பத்திய உறவுக்கு வராத மனைவியை ஆத்திரத்தில் கணவர் கொலை செய்துள்ளார்.

  • Share this:
திருச்சியில் திருமணமான புதுமணப்பெண் தாம்பத்திய உறவுக்கு வராததால் கணவர் கொடூரமாக கொலை செய்தது அம்பலமாகி உள்ளது.

திரு்சசி மாவட்டம் டோல்கேட் அடுத்து வாழவந்தான்புரத்தில் வசிக்கும் அருள் சாமியின் மனைவி கிறிஸ்டி ஹெலன்ராணி வயது 26. இவர் அதிகாலை வெளியே சென்றவர் திரும்பி வராத நிலையில். கொள்ளிடம் ஆற்று அருகே அரைநிர்வாண நிலையில்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, நகைகள் பறிக்கப்பட்டுள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  மோப்ப நாய்கள் உதவியுடன் குற்றவாளிகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் புதுமணப்பெண்ணை கொலை செய்தது அவரது கணவர் தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது. திருமணமாகி இதுவரை தாம்பத்திய உறவுக்கு வராத மனைவியை ஆத்திரத்தில் கணவர் கொலை செய்துள்ளார்.

சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக நகைகளை பறித்து, மனைவியின் ஆடைகளை கலைத்து பாலியல் வன்கொடுமை செய்தது போல் செய்து நிர்வணமாக ஆற்றில் யாரோ கொலை செய்தது போல் செய்துள்ளார்.போலீசாரின் தீவிர விசாரணையில் கணவனே மனைவியை  கொடூரமாக கொலை செய்து நாடகமாடியது அம்பலாமாகி உள்ளது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

 
First published: August 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading