ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் மாறும் வெதர்.. மழை உண்டா? வானிலை அலெர்ட்!

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் மாறும் வெதர்.. மழை உண்டா? வானிலை அலெர்ட்!

மாதிரி படம்

மாதிரி படம்

அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வானிலை மையம் இயக்குநர் பாலச்சந்திரன் தகவல்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கேரளாவின் வடபகுதியில் வளிமண்டலத்தின் மேல் இருக்கு சுழற்சி நிலவுகிறது. இது வடக்கு கேரளா, தெற்கு கர்நாடக கடற்கரை பகுதியில் வழியாக தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு செல்லும்.

இதனால் நாளை தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இது வரும் தினங்களில் மேற்கு திசையில் நகர்ந்து இந்திய கடற்பகுதியில் விட்டு விலகிச் செல்லும் என தென்மண்டல வானிலை மையம் இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் ”இதனால் அதனுடைய தாக்கம் அடுத்து வரும் தினங்களில் இருக்காது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது.அடுத்து வரும் 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

கனமழை பொறுத்தவரையில் வடகடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பொறுத்தவரையில் நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும். சில பகுதிகளில் கனமழை பெய்யும். நாளை முதல் படிப்படியாக குறையும்” என தெரிவித்தார்.

First published:

Tags: Heavy Rainfall, MET, Rain Update, Weather News in Tamil