Home /News /tamil-nadu /

பயோமெட்ரிக்கால் தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு புதிய சிக்கல்

பயோமெட்ரிக்கால் தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு புதிய சிக்கல்

ரேஷன் அட்டை

ரேஷன் அட்டை

தாலுகா அலுவலக இ- சேவை மையத்தில் விரல் ரேகை அப்டேட் செய்வதற்கு தினமும் பலர் கூடுகின்றனர்.

    நியாயவிலை கடைகளில் நடைமுறையிலுள்ள பயோமெட்ரிக் முறையில் பல சிக்கல்கள் உள்ளதால், பயனாளிகள் ரேஷன் பொருட்களை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் நவீன பயோமெட்ரிக் இயந்திரத்தை பயன்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பயோமெட்ரிக் முறை நடைமுறைக்கு வந்தது. அதன் மூலம் ஸ்மார்ட் கார்டில் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் யாராவது ஒருவர் மட்டுமே பொருட்களை வாங்கமுடியும். அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த பயோ மெட்ரிக் முறையிலேயே பொருள்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த பயோ மெட்ரிக் முறை சரியாக வேலை செய்வதில்லை என பொதுமக்கள் மத்தியில் இந்த திட்டம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    Also Read : மதுரை ஆதீன மடத்தின் பீடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டேன் - நித்யானந்தா மீண்டும் சர்ச்சை

    பயோ மெட்ரிக் முறையில் பயனாளிகள் விரல் ரேகை பதிவாகாததால், பயனாளிகள் பொருட்கள் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். இலவச அரிசி, பருப்பு, எண்ணெய்,கோதுமை போன்ற பொருட்கள் வாங்க ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப் பட்டது. பயனாளியின் ஆதார் அட்டையில் உள்ள விரல் ரேகை பொருட்கள் வாங்கும்போது வைக்கப்படும் விரல் ரேகையுடன் ஒத்துப்போக வேண்டும். ஆனால் பயனாளிகள் விரல் ரேகையை பதிவு செய்யும் போது பயோ மெட்ரிக் இயந்திரம் ஏற்க மறுக்கிறது.

    பயனாளிகளின் விரல் ரேகை பதிவாகவில்லை என ரேஷன் பொருட்களை தராமல் பணியாளர்கள் திருப்பி அனுப்புவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் பயனாளிகள் ஆதார் அட்டையில் விரல் ரேகையை புதுப்பிக்க ( update ) தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    Also Read : நீட் தேர்வு ரத்து என்பதை ஒரு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும் - உதயநிதி ஸ்டாலின்

    தாலுகா அலுவலக இ- சேவை மையத்தில் விரல் ரேகை அப்டேட் செய்வதற்கு தினமும் பலர் கூடுகின்றனர். ஆனால் தாலுகா அலுவலக இ- சேவை மையத்தில் தினமும் 50 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கி அவர்களுக்கான குறை சரிசெய்யப் படுகிறது. மற்றவர்கள்.மறுநாள் வந்து காத்திருக்க வேண்டி உள்ளது என்று தேனி பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    மேலும் ஆதார் அட்டையில் புதுப்பித்து அப்டேட் ஆகி வருவதற்கு ஒரு வார காலம் ஆவதால், அந்த ஒரு வாரம் நியாயவிலைக் கடைகளில் போடப்படும் பொருட்களை வாங்க முடியவில்லை என பயனாளிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். தேனி மாவட்டம் முழுவதும் இதே நிலைதான் காணப்படுகிறது. எனவே சிக்னல், நெட் ஒர்க் குறைபாடு தவிர்த்து ரேஷன் கடைகளில் நவீன பயோ மெட்ரிக் இயந்திரம் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வலியுறுத்துகின்றனர்.

    செய்தியாளர் - சுதர்ஸன், தேனி

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Ration card, Ration Shop

    அடுத்த செய்தி