• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்கு புதிய கருவிகள் - 30 நிமிடத்தில் ரிசல்ட்

சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்கு புதிய கருவிகள் - 30 நிமிடத்தில் ரிசல்ட்

கொரோனா பரிசோதனை

கொரோனா பரிசோதனை

ரேபிட் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கருவிகள் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

  • Share this:
    சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகளை 30 நிமிடத்தில் அறியும் வகையில் ரேபிட் ஆர்.டி.பி.சி.ஆர். கருவிகள் வைக்கப்பட்டுள்ளன.

    சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்தில், பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவது குறித்து கடந்த வாரம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

    அப்போது, லண்டன், பிரேசில், தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனையுடன், ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை ரூ.900 கட்டணத்தில் 4 மணி நேரத்தில் முடிவு அறிவிக்கப்படுகிறது. இந்தப் பரிசோதனை முடிவுகளை விரைவில் அறியும் நவீன சோதனை முறை சில நாட்களில் அமல்படுத்தப்பட இருப்பதாக கூறினார்.

    Must Read : சென்னையில் ரவுடிசம் தலை தூக்குகிறது: உடனே தடுத்து நிறுத்தவேண்டும் - வணிகர் சங்கத் தலைவர் விக்ரமராஜா கோரிக்கை

    சென்னை விமான நிலையம்


    அதன்படி, ரேபிட் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கருவிகள் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விரைவாக கொரோனா பரிசோதனை முடிவுகளை அறிய இந்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கருவிகளில் பரிசோதனை முடிவுகள் 30 நிமிடங்களில் வழங்கப்படும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த கருவியின் பயன்பாடு இன்று (ஆகஸ்ட்டு 6) முதல் தொடங்கப்பட இருப்பதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், துபாய் போன்ற நாடுகளுக்குச் செல்லும் பயணிகளுக்கு இந்த கருவிகள் மிகவும் வசதியாக இருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: