Home /News /tamil-nadu /

கோடநாடு கொலை வழக்கு : மூடி மறைக்கப்பட்ட பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளன - காவல்துறை

கோடநாடு கொலை வழக்கு : மூடி மறைக்கப்பட்ட பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளன - காவல்துறை

கொடநாடு பங்களா

கொடநாடு பங்களா

மேல் விசாரணை நடத்தப்பட்டதில் மூடி மறைக்கப்பட்ட பல விபத்துக்கள் மற்றும் புதிய தகவல்கள் கிடைத்துள்ளதால், இந்த  வழக்கு விசாரணைக்கு கால நிர்ணயம் செய்யக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், மூடி மறைக்கப்பட்ட பல விபத்துக்கள் மற்றும் புதிய தகவல்கள் தெரிய வந்துள்ளதாகவும்  இந்த  வழக்கு விசாரணைக்கு கால நிர்ணயம் செய்யக்கூடாது என காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கடந்த 2017ம் ஆண்டு நடந்த நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில்  கொலை, கொள்ளை நடைபெற்றது. எஸ்டேட் காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், அங்கிருந்த ஏராளமான ஆவணங்கள் திருடு போனதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு  விசாரணை நடத்திப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக,  ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மற்றும் அவரது உறவினர் விவேக், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி அவரது உறவினர்கள் மற்றும் அதிமுக பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என கிட்டத்தட்ட 230க்கு மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது.

இதையும் வாசிக்க: முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று கேரளா பயணம் - பினராயி விஜயனை சந்தித்து பேச திட்டம்..

மேலும் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய உயிரிழந்த கார் ஓட்டுநர் கனகராஜின் உறவினர்கள், குற்றம் சாட்டப்பட்ட வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட  மனோஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி,  வழக்கில் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார். மேல் விசாரணை நடத்தப்பட்டதில் மூடி மறைக்கப்பட்ட பல விபத்துக்கள் மற்றும் புதிய தகவல்கள் கிடைத்துள்ளதால், இந்த  வழக்கு விசாரணைக்கு கால நிர்ணயம் செய்யக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, வழக்கின் விசாரணை நிலை குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை செப்டம்பர் 16 ம் தேதி தள்ளி வைத்துள்ளார்.
Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Crime News, Jayalalitha, Kodanadu estate, Tamilnadu

அடுத்த செய்தி