தமிழக அரசின் புதிய தொழில் கொள்கை நாளை வெளியீடு

தமிழக அரசின் புதிய தொழில் கொள்கை நாளை வெளியீடு

தமிழக அரசு தலைமைச் செயலகம்

தமிழகத்தில் புதிய தொழில் தொடங்க 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நாளை முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தாகின்றன.

  • Share this:
    தமிழக அரசின் புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை வெளியிடவுள்ளார்.

    தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் விதமாக " புதிய தொழில் கொள்கை" மற்றும் புதிய குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் கொள்கை வெளியிடப்படும் என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ்விருண்டு தொழில் கொள்கைகளையும் நாளை காலை சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெறவுள்ள விழாவில் முதலமைச்சர் வெளியிடவுள்ளார்.

    மேலும், தமிழகத்தில் புதிய தொழில் தொடங்க 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நாளை முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தாகின்றன. இவை தவிர ஏற்கனவே போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அடிப்படையில், 20 தொழில்நிறுவனங்களின் செயல்பாட்டையும் முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்.

    இதன் மூலம், நேரடியாகவும் மறைமுகமாகவும் 2 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. மேலும் 4 சிப்காட் மற்றும் 6 டிட்கோ தொழிற் பேட்டைக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டவுள்ளார்
    Published by:Vijay R
    First published: