• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • EIA | சுற்றுச்சூழல் அனுமதியை வேகமாக வழங்குவதற்கு புதிய வழிகாட்டுதல்கள்.. மத்திய அரசு வெளியீடு..

EIA | சுற்றுச்சூழல் அனுமதியை வேகமாக வழங்குவதற்கு புதிய வழிகாட்டுதல்கள்.. மத்திய அரசு வெளியீடு..

சுற்றுச்சூழல் அனுமதி - மத்திய அரசு வழிகாட்டல்கள்

சுற்றுச்சூழல் அனுமதி - மத்திய அரசு வழிகாட்டல்கள்

புதிய சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில் இப்படி திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதையும் மத்திய அரசு வேகப்படுத்தியிருப்பதை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடுமயாக எதிர்க்கின்றனர்.

  • Share this:
இந்தியாவில் பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகள் அல்லது வளர்ச்சி திட்டங்களைத் தொடங்க வேண்டுமென்றால் சுற்றுச்சூழல் சட்டம் 1986-இன் கீழ் அனுமதி பெற வேண்டும். ஒரு தொழிற்சாலைக்கோ, திட்டத்திற்கோ சூழலியல் அனுமதி வாங்க வேண்டும் என்றால் அந்தத் திட்டம் சுற்றுச்சூழலின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை ஆராய்ந்து அதை அறிக்கையாக அரசுக்கு அந்த நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும்.
திட்டத்தின் தன்மையைப் பொறுத்து அந்த விண்ணப்பத்தை மத்திய சுற்றுச்சூழல் துறையின் வல்லுநர் மதிப்பீட்டு குழு அல்லது மாநில சுற்றுச்சூழல் துறையின் வல்லுநர் மதிப்பீட்டு குழு திட்டத்தினால்  சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சாதக பாதகங்கள் குறித்து ஆராய்ந்து அனுமதி வழங்கும்.

இந்த சுற்றுச்சூழல் அனுமதியை பெறுவதற்காக எடுத்துக்கொள்ளப்படும் காலம் அதிகமாக இருப்பதால் திட்டங்களை தொடங்குவதில் பல்வேறு பிரச்சனைகள் எழுவதாக இந்தியா முழுவதும் இருக்கின்ற பல்வேறு நிறுவனங்கள் மத்திய அரசிடம் முன்வைத்த கோரிக்கையினை பரிசீலனை செய்த மத்திய சுற்றுச்சூழல் துறை திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதியினை வேகமாக வழங்குவதற்கு ஏதுவாக புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, சுற்றுச்சூழல் அனுமதி கோரும் விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் வல்லுனர் மதிப்பீட்டுக்குழு ஒரு மாதத்தில் குறைந்தது 2 முறையாவது கூட்டம் நடத்தியிருக்க வேண்டும். 2 கூட்டங்களுக்கு இடைப்பட்ட கால அளவு 15 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஒரு கூட்டம் நடப்பதற்கு 10 நாட்கள் முன்பு வந்த புதிய விண்ணப்பங்களை  நடப்பு கூட்டத்திலேயே பரிசீலிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள்ம் முன்பு உரிய ஆவணங்கள் உள்ளதா என்பதை மட்டும் பரிசோதித்தால் போதுமானது. திட்டங்களில் இருக்கும் சந்தேகங்கள் கூடுதல் விபரங்களை பரிசீலனையின்போது திட்ட செயல்பாட்டாளர்களிடம் கேட்டால் போதுமானது.



திட்டத்திற்கான அனுமதி கோரியவர்கள் வல்லுநர் குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டாலும் கூட திட்டத்தை வல்லுனர் குழு பரிசீலிக்கலாம். ஏன் கலந்துகொள்ளவில்லை என்பதை விண்ணப்பதாரரிடம் கேட்டுப் பெற வேண்டும்.
வல்லுனர் குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாமலும் விளக்கமும் அளிக்காமல் இருந்தால் திட்ட அமைவிடத்தில் நேரில் சென்று திட்டத்தின் நிலைப்பாடு குறித்து ஆய்வு செய்ய வேண்டும்
என்கிற வழிகாட்டுதல்களை மத்திய சுற்றுச்சூழல் துறை வெளியிட்டுள்ளது. நிறுவனங்களுக்கு சாதகமான இந்த வழிகாட்டுதல்களால் எளிதாக தொழில் துவங்க முடியும் என்றாலும் புதிய சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில் இப்படி திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதையும் மத்திய அரசு வேகப்படுத்தியிருப்பதை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடுமயாக எதிர்க்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Gunavathy
First published: