Home /News /tamil-nadu /

திமுக அரசு மனசாட்சியோடு யோசிங்க - மின்கட்டண உயர்வு குறித்து டிடிவி தினகரன் கண்டனம்

திமுக அரசு மனசாட்சியோடு யோசிங்க - மின்கட்டண உயர்வு குறித்து டிடிவி தினகரன் கண்டனம்

டிடிவி.தினகரன்

டிடிவி.தினகரன்

'மின் கட்டண உயர்வால் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் பாதிப்பு ஏற்படும்' - டிடிவி தினகரன் கண்டனம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    மனசாட்சியோடு யோசித்துப் பார்த்திருந்தால் தி.மு.க அரசுக்கு இதெல்லாம் புரிந்திருக்கும் என மின்கட்டண உயர்வு குறித்து டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த பிறகும், தமிழகத்தில் மின் கட்டண உயர்வை அமல்படுத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
    பெயரளவுக்கு கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்திவிட்டு, அதில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளுக்கு எந்தவித முக்கியத்துவமும் கொடுக்காமல் இந்த கட்டண உயர்வு இன்றுமுதல் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு குடும்பங்களுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படும். வீட்டு வாடகை, கடை வாடகை போன்றவை உயர்வதற்கும், ஏற்கனவே நெருக்கடியிலிருக்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மேலும் நெருக்கடிக்கு ஆளாவதற்குமே மின் கட்டண உயர்வு வழிவகுக்கும்.





    மனசாட்சியோடு யோசித்துப் பார்த்திருந்தால் தி.மு.க அரசுக்கு இதெல்லாம் புரிந்திருக்கும் என பதிவிட்டுள்ளார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Electricity, Electricity bill, TTV Dinakaran

    அடுத்த செய்தி