தலைவர் வரும்போது வருபவர்கள் கட்சியின் சொத்து அல்ல - தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி

தலைவர் வரும்போது வருபவர்கள் கட்சியின் சொத்து அல்ல; கிராமப்புறங்களில் அடிமட்டத்தில் உழைப்பவர்களே கட்சியின் சொத்து என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தலைவர் வரும்போது வருபவர்கள் கட்சியின் சொத்து அல்ல - தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி
கே.எஸ். அழகிரி, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர். (படம்: Facebook)
  • Share this:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஜூம் செயலி மூலம் காணொளிக் காட்சி கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் தேசிய தலைவர் மீனாட்சி நடராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் மணி சங்கர் அய்யர், மற்றும் சசிகாந்த் செந்தில் ஆகியோரும் பங்கேற்று உரையாற்றினார்கள். இதில், கட்சியின் மாவட்ட தலைவர்கள், வட்டார தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

காணொளிக் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக அரசியல் நிலவரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு சிக்கல் இருக்கிறது. கட்சிக்கு வலிமையான அமைப்பு இல்லை, வலிமையாக பரப்புரை செய்கிற சக்தி இல்லை. அரசியலில் இது முக்கியம். காங்கிரஸ் கட்சியினர் நிறைய படிக்க வேண்டும்; காங்கிரஸ் சண்டை போடும் கட்சியல்ல, கருத்தியல் நிறைந்த இயக்கம் என மாற்ற வேண்டும். காங்கிரஸ் கட்சியால் மோடி, எடப்பாடி பழனிசாமியைத் தூக்கி எரிய முடியாதா? தமிழகத்தில் நிச்சயம் முடியும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "கட்சியில் அனைவரும் ஒரே மாதிரி பேச வேண்டும். நாடாளுமன்ற மூடப்பட்டுள்ள நிலையில், புதிய கல்விக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரே விதமான குரல் ஒலிக்க வேண்டும். ஆளும் கட்சியை, எதிர்க் கட்சி விமர்சிப்பதுதான் அரசியல். முதலில் பாராட்டி விட்டு, பின் மறுப்பு தெரிவிப்பது பயன்படாது. மாறி மாறி பேசினால் களத்தில் கையில் ஆயுதத்துடன் சுற்றும் தொண்டர்களிடம் ஆர்வத்தை இழக்க நேரிடும்.


இதற்கு கட்சியில் சட்டம் போட முடியாது. அவரவர் உணர வேண்டும். இஷ்டத்துக்கு பொது வெளியில் பேசினால், அந்த இயக்கத்தை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், பின்பற்ற மாட்டார்கள். அனைவரது குரல் ஒன்றுபோல் இருந்தால் தான் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.தலைவர் வரும்போது வருபவர்கள் கட்சியின் சொத்து அல்ல. கிராமப்புறங்களில் அடிமட்டத்தில் உழைப்பவர்களே கட்சியின் சொத்து. காங்கிரஸ் கட்சியினர் அழுத்தமாகப் பேச வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் வேரூன்ற முடியும். சந்தர்ப்பவாதிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். அவர்கள் வளராமல் இருக்க மற்றவர்கள் உழைக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சியினர் வீட்டின் முன் காங்கிரஸ் கொடியை வையுங்கள். ஆங்காங்கே கொடியைப் பார்த்தால் காங்கிரஸ் எழுச்சியாக இருக்கிறது என்ற எண்ணம் வரும். அதிக எண்ணிக்கையைக் காட்ட வேண்டும் என உறுப்பினர் சேர்க்கையில் கண்டவர்களின் பெயரைப் பதிவு செய்ய வேண்டாம். நேர்மையாக உறுப்பினர் சேர்க்கை செய்யுங்கள்" என கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
First published: August 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading