புதிய கல்வி கொள்கை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டால் எல்.கே.ஜி முதல் உயர்கல்வி வரை அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு சென்று விடும் என்றும்
குற்றம்சாட்டியுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கை, மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கிறது என்றும், மாணவர்களுக்கு மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால், இது குறித்த கருத்துகளை தேசிய அளவில் கொண்டு செல்வது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது எனவும், முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி தெரிவித்துள்ளார்.
Also read... மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் பதற்றமான சூழல் - நடந்தது என்ன?
இதுதொடர்கா சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி, அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் புதிய கல்விக் கொள்கை குறித்த தேசிய அளவிலான மாநாடு வரும் 15ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதில் கேரளா, தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர், புதிய கல்விக் கொள்கை மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கிறது என்றும், ஏழை எளிய நடுத்தர மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் என்றும் தெரிவித்தார்.
எனவே, புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்துக்களை தேசிய அளவில் கொண்டு செல்வதற்கு சென்னை மாநாடு வழிவகுக்கும் என்றும் வசந்திதேவி தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.