ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திறமையான ஆசிரியர்கள் இல்லை.. புதிய கல்வி கொள்கைதான் தீர்வு.. ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

திறமையான ஆசிரியர்கள் இல்லை.. புதிய கல்வி கொள்கைதான் தீர்வு.. ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

ஆர்.என்.ரவி

ஆர்.என்.ரவி

திறமையான ஆசிரியர்கள் இல்லாததே அறிவியல் படிப்புகளை மாணவர்கள் அதிகம் தேர்வு செய்யாததற்கு காரணம் என கூறினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

வளமான புதிய பாரதத்தை உருவாக்க தேசியவாதம் மிகவும் முக்கியமானது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிள்ளார்.

சென்னை மந்தைவெளியில் ராதா சுவாமி சிறப்பு மையத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், மாணவர்களுக்காக திறக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு மையம் எதிர்கால ஆளுமைகளை உருவாக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தற்போது, இந்தியாவில் கலை படிப்புகளில் தான் 70 சதவீதம் பேர் முதுகலை படிப்புகளை முடிப்பதாக, அண்மையில் வெளியான பல்கலைக்கழக மானியக் குழுவின் அறிக்கையை சுட்டிக்காட்டிய ஆளுநர், தமிழ்நாட்டிலும் இதே நிலை தான் தொடர்கிறது என்றார்.

திறமையான ஆசிரியர்கள் இல்லாததே அறிவியல் படிப்புகளை மாணவர்கள் அதிகம் தேர்வு செய்யாததற்கு காரணம் எனவும் கூறினார். இதைப் போக்கும் வகையில் தேசிய கல்விக் கொள்கை நிச்சயம் புதிய மாற்றத்தை கொண்டு வரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

First published:

Tags: New Education Policy, RN Ravi, Tamil Nadu Governor