• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்... கரையை கடப்பது எங்கு?

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்... கரையை கடப்பது எங்கு?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

  • Share this:
    தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, நாளை தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில், நாளை தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, இலங்கைக்கும், தென் மாவட்டங்களுக்கும் இடையே கரையை கடக்கும். வடகிழக்கு பருவமழை காலத்தில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, நான்காவது புயல் சின்னமாகும். இந்த தாழ்வு பகுதியால், துாத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே இன்று மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், இதர வட மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    நாளை (நவம்பர் 24)ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் இயக்குனர் புவியரசன் தகவல் வெளியிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: