• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வங்கக் கடலில் இன்று புதிய காற்றத்தழுத்த தாழ்வு பகுதி - எந்த மாவட்டங்களில் கனமழை?

வங்கக் கடலில் இன்று புதிய காற்றத்தழுத்த தாழ்வு பகுதி - எந்த மாவட்டங்களில் கனமழை?

மழை

மழை

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • Share this:
    தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இன்று மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் நாட்களில் தமிழக கரையை நோக்கி நகரக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, நாளை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளது.

    வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

    மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக்காட்சி மூலம் இந்த ஆலோசனையில் முதலமைச்சர் பங்கேற்கிறார்.

    இதில், தலைமைச் செயலாளர் இறையன்பு, பொதுத்துறைச் செயலாளர் ஜெகநாதன் மற்றும் துறை அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர். அப்போது, கனமழையின்போது, அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்துவது, பொதுமக்களைப் பாதிக்காத வகையில் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது உள்ளிட்ட அறிவுரைகளை முதலமைச்சர் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: