வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை ஒடிசாவை நோக்கி நகரும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கிழக்கு மத்திய மற்றும் தென் கிழக்கு அரபிக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து, லூபா என்ற புயலாக ஓமன் கடற்கரையை நோக்கி நகரும் என்றார். மேலும் வங்க கடலில் தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அதனால் அது அடுத்த 12 மணி நேரத்தில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் ஒடிசா கடற்கரையை அடையும் என வானிலை அறிக்கையின் எச்சரிக்கை குறித்து விளக்கினார்.
இதனைத் தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளதாக எச்சரித்துள்ளார். மேலும் மீனவர்கள் வடக்கு அரபிக்கடல் மற்றும் தென் கிழக்கு, மத்திய கிழக்கு வங்கக்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். கடலில் உள்ள மீனவர்கள் கரைக்கு திரும்பும் மாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
1.10.2.18 முதல் 07.10.2018 வரை தமிழகத்தில் மழை திருநெல்வேலி மாவட்டம், தூத்துக்குடி, திருவாரூர், ராமநாதபுரம், அரியலூர் , விழுப்புரம், தேனி, தஞ்சை, கோவை, சென்னை, உள்ளிட 29 மாவட்டங்களில் இயல்பை காட்டிலும் அதிகமாக பதிவாகியுள்ளது. சாதாரணமாக 35.4மி.மீ பெய்யும் மழையின் அளவானது 82 மி.மீட்டராக பதிவாகியுள்ளது. இது 132 சதவீதம் கூடுதலாக உள்ளது என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசியவர், மழைகாலங்களில் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6,691 நிவாரணமுகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த நிவாரண முகாம்களில் மூத்த இந்திய ஆட்சி பணியாளர்களை முதல்வர் நியமித்துள்ளார். எனவே மக்கள் அச்சப்ப்பட வேண்டாம் எனவும் கூறினார்.
இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 646 மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர். அதில் 514 பேர் கரைதிருப்பியதாகவும் 132 மீனவர்களுக்கு எச்சரிக்கை தகவல் அளிக்கப்பட்டுள்ளதகாவும் 86 படகுகளில் சென்ற 46 மீனவர்களுக்கு மட்டும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.
இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்தவர், ரெட் அலார்ட் என்பது நிர்வாகத்திற்கு கொடுக்கப்பட்ட செய்தி என்றும், இதனை மக்கள் அச்சம் கொள்ளும்படும்படி எடுத்து செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் கனமழை, மிக கனமழை மற்றும் தொடர் மழையாக பெய்யக்கூடும். சில நேரங்களில் ரெட் அலர்டும் கொடுக்கப்ப்படும் அதனால் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் அமைச்சர் உதயக்குமார் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bay of Bengal, Fisherman, Meteorological dept, R.B.Udhayakumar