ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தை மிரட்டப்போகும் ‘மாண்டஸ்’ புயல்... இந்த பெயர் வைக்க என்ன காரணம் தெரியுமா?

தமிழகத்தை மிரட்டப்போகும் ‘மாண்டஸ்’ புயல்... இந்த பெயர் வைக்க என்ன காரணம் தெரியுமா?

மாதிரி படம்

மாதிரி படம்

வைத்த பெயர்களை மீண்டும் வைக்கப்படாத வகையில் உலக வானிலை மையம் பெயர்களை ஆராய்ந்து முடிவு எடுக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்கக்கடலில் உருவாகும் புதிய புயலுக்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளைக்குள் மேற்கில் இருந்து வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற வாய்ப்புள்ளது. டிசம்பர் 8க்குள் புயலாக வலுபெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் இன்று காலை 5:30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நாளைக்குள் மேற்கில் இருந்து வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து வரும் 8ம் தேதி அதே திசையில் நகர்ந்து புயலாக உருவெடுக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த புயலுக்கு தான் மாண்டஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. உலக வானிலை மையத்தில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் புயல்களுக்கு பெயர்களை பரிந்துரைத்து வருகிறது. அந்த வகையில்  ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த இந்த பெயரே அடுத்த புயலுக்கு சூட்டப்படும் நிலை இருந்தது.

அதன்படி நிசர்கா, கடி, நிவர், புரேவிஸ தாக்டே, யாஸ், குலாப், ஷாஹீன், ஜவாத், அசானி ஆகிய பெயர்கள் கடந்த 2020ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது முதல் செட்டில் ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஏமன் முறையே பரிந்துரைத்த மாண்டஸ் மற்றும் மோச்சா ஆகிய இரு பெயர்கள் மட்டுமே பயன்படுத்தப்படாமல் இருந்தன.

ஏற்கெனவே சூட்டப்பட்ட  பெயர்களை மீண்டும் வைக்கப்படாத வகையில் உலக வானிலை மையம் பெயர்களை அறிவிப்பதற்கு முன்பாக நன்கு சோதனை செய்துவிட்டே மாண்டஸ் என்ற பெயரை தேர்வு செய்து அறிவித்துள்ளது.

First published:

Tags: Cyclone, Heavy rain, MET warning, Meteorological dept, Weather News in Tamil