Home /News /tamil-nadu /

ஊரடங்கு: ஏழைக் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கி திருமண விழாவைக் கொண்டாடிய புதுமணத் தம்பதிகள்

ஊரடங்கு: ஏழைக் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கி திருமண விழாவைக் கொண்டாடிய புதுமணத் தம்பதிகள்

நிவாரணம் வழங்கி திருமண விழாவைக் கொண்டாடிய புதுமணத் தம்பதிகள்.

நிவாரணம் வழங்கி திருமண விழாவைக் கொண்டாடிய புதுமணத் தம்பதிகள்.

ஆடம்பர செலவுகள் பலவற்றைத் தவிர்த்து திருமண விழாவில் நிவாரண உதவிகள் செய்த புதுமணத் தம்பதியினரை திருமண விழாவில் கலந்துகொண்ட பலரும் பாராட்டிச் சென்றனர்.

ஊரடங்கில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஏழை மக்களுக்கு உதவி செய்து திருமண விழாவைக் கொண்டாடி அசத்தியுள்ளனர் நாகை மாவட்டம் தேவூர் பகுதியைச் சேர்ந்த புதுமண தம்பதியினர்.

கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த திருமணங்கள் அனைத்தும் எளிமையாகவும் தனிமனித இடைவெளியைப் பின்பற்றியும் நடைபெற்று வருகின்றன. மேளதாளம், மணமக்கள் ஊர்வலம், உறவினர்களுக்கு விருந்து, திருமண மண்டபம் என அனைத்து செலவுகளையும் தவிர்த்து வீட்டிலும் கோவில்களிலும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்று வருகிறது.

தேவூர் பகுதியில் வாள் பட்டறை நடத்தி வந்த காந்தி என்பவருடைய மகன் மணிகண்டனுக்கும் கீழ்வேளூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகா என்பவருக்கும் தேவூர் தேவ புரீஸ்வரர் ஆலயத்தில் எளிமையான முறையில் இன்று திருமணம் நடைபெற்றது. அதில் ஊரடங்கு உத்தரவினால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள 100 ஏழைக் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான மளிகைப் பொருட்களை புதுமணத் தம்பதியினர் கொடுத்து மகிழ்ந்தனர்.

ஆடம்பர செலவுகள் பலவற்றைத் தவிர்த்து திருமண விழாவில் நிவாரண உதவிகள் செய்த புதுமணத் தம்பதியினரை திருமண விழாவில் கலந்துகொண்ட பலரும் பாராட்டிச் சென்றனர். ஒன்றியக்குழு உறுப்பினர் கேகே. கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர் வைதேகி ராசு, துணைத்தலைவர் பொற்குடி கணேசன், மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் பலர் மணமக்களோடு இணைந்து நிவாரண உதவிகளை வழங்கினர்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see:
Published by:Rizwan
First published:

Tags: Lockdown, Marriage, Nagapattinam

அடுத்த செய்தி