விரைவு பேருந்துகளில் தொலைதூர பயணங்கள் மேற்கொள்ளும் போது, சாலையோரம் இருக்கும் உணவகங்களில் நிறுத்தப்படுவது வழக்கம். அவ்வாறு அரசுப் பேருந்துகளை உணவகத்தில் நிறுத்தம் செய்ய ஒரு வருடத்திற்கு உரிமம் வழங்குவதற்கான நிபந்தனைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
முக்கிய நிபந்தனைகள் :
உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம் மற்றும் சுவை உள்ளதாக இருக்க வேண்டும். மேலும் சைவ உணவு மட்டும்தான் தயார் செய்ய வேண்டும்.
கழிப்பிட வசதி இலவசமாக இருக்க வேண்டும். உணவகத்தில் உள்ள கழிவறை சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும். பயோ-கழிவறை இருக்க வேண்டும்.
பேருந்துகள் உணவகத்திலிருந்து வெளியே வரும்போது ஓட்டுனருக்கு நெடுஞ்சாலையிலிருந்து வரும் பேருந்துகள் தெளிவாகத் தெரியும்படி உணவகத்தின் இடம் இருக்க வேண்டும்.
உணவக வளாகத்தில் பயணிகளின் பாதுகாப்பு கருதி CCTV பொருத்தியிருக்க வேண்டும்.
பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் மற்றும் அவர்தம் உடமைகளுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும்.
உணவகத்தில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலைப்பட்டியல் பலகை பயணிகளுக்கு தெரியும்படி வைக்கப்பட வேண்டும்.
மேலும், உணவகத்தில் விற்கப்படும் அனைத்து பொருட்களும் நியாயமான விலையில் எம்.ஆர்.பி (MRP) விலையை விட அதிகமில்லாமல் இருக்க வேண்டும்.
உணவகத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளில் உள்ள பயணிகளுக்கு ஏதேனும் இடையூறு தரும் செயலோ, புண்படும் வகையிலான செயல்கள் ஏற்படா வண்ணம் இருக்க வேண்டும்.
Must Read : அரசியல் சரிபட்டு வராது... பாஜகவில் இருந்து விலகிய பிரபல நடிகை
உணவக முன்புற வாயிலில் பூட்டப்பட்டுள்ள புகார் பெட்டி வைத்திருக்க வேண்டும். உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்துள்ளது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.