ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திருச்சி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்

திருச்சி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்

தமிழக அரசு தலைமைச் செயலகம்

தமிழக அரசு தலைமைச் செயலகம்

திருச்சி, ராமநாதபுரம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பல்வேறு துறைச் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், வனத்துறை அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பை தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, ‘தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் வணிக வரி துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தென்காசி மாவட்ட புதிய ஆட்சியராக சென்னை பெருநகர நீர் வழங்கல் பிரிவில் நிர்வாக இயக்குனராக இருந்த ஆகாஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் ஆணையத்தின் இயக்குநராக இருந்த ஜானி டாம் வர்கீஸ், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது ஆட்சியராக உள்ள சங்கர் லால் குமாவத் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தருமபுரி மாவட்டத்தின் ஆட்சியர் திவ்யதர்ஷினி மாற்றம் செய்யப்பட்டு சாந்தி ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குநராக இருந்த பிரதீப் குமார், திருச்சி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது ஆட்சியராக உள்ள சிவராசு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

First published: