ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

புத்தாடை இல்லாமல் தீபாவளியா? பெண்களை பிரமிக்க வைக்கும் புதுவரவுகள்..

புத்தாடை இல்லாமல் தீபாவளியா? பெண்களை பிரமிக்க வைக்கும் புதுவரவுகள்..

தீபாவளி புத்தாடைகள்

தீபாவளி புத்தாடைகள்

Diwali : தித்திக்கும் தீபாவளி என்றதும் பட்டாசுகளுடன் சேர்ந்து நினைவுக்கு வருவது புத்தாடைகள்தான்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  தீபாவளிக்கு பட்டுப்புடவைகள் வாங்க பெண்கள் கூட்டம் ஒரு பக்கம் சென்றாலும் மறுபக்கம் சல்வார் குர்த்தி என அடுத்த வரிசையை நோக்கி செல்கின்றனர். இந்த ஆண்டு  அறிமுகமாகியுள்ள புதுவரவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்..

  தித்திக்கும் தீபாவளி என்றதும் பட்டாசுகளுடன் சேர்ந்து நினைவுக்கு வருவது புத்தாடைகள்தான். இப்போதெல்லாம் பெண்களை பொறுத்தமட்டில் பட்டுப் புடவை வாங்குவோர் எண்ணிக்கை குறைவு. அவர்களின் அடுத்தபடியான தேர்வு சல்வார், குர்த்தி  போன்றவைதான். தீபாவளி என்றால் ஆடை வாங்குவதற்கு கொஞ்சம் கூடுதலாகவே பணம் ஒதுக்குவார்கள் பெண்கள். அவர்களுக்கென்றே இந்த ஆண்டும் ஆயிரம் ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரையிலும் வண்ணமயமாய் காட்சியளிக்கின்றன சுடிதார் ரகங்கள்.

  சல்வார், லெகங்கா, லாங் ஃப்ராக்,கவுன் , சராரா, நைரா கட் சுடிதார் , டாங்கலி என வண்ணமயமாய் பிரமிக்க வைக்கின்றன. தோழிகள், உறவினர்கள் மத்தியில் தங்களுடைய ஆடை தனித்துவமாய் தெரிய வேண்டும் என பல மணி நேரம் தேடித்தேடி வாங்குகின்றனர் பெண்கள். இன்றைய சூழலில் துணி நீண்ட காலம் உழைக்க வேண்டும் என பெண்கள் விரும்புவது இல்லை.முடிந்தவரையில் குறைவான விலையில் மனதிற்கு நிறைவான சுடிதார்களை வாங்குகின்றனர். இதனால் ஒன்று வாங்குவதற்கு பதில் மூன்று புதிய ஆடைகள் வாங்கிக் கொள்ள முடியும்.

  மணப்பெண் கோலத்தில் விருந்து நிகழ்ச்சிக்கு செல்லும் வகையில் 24 ஆயிரம் ரூபாயில் பார்க்கும் பெண்களை தன் பக்கம் ஈர்க்கிறது ஃப்ராக்; ஆனால் அதன் விலையை பார்த்தவுடன் வியப்பில் விலகிச் செல்லவும் வைக்கிறது. ஆனால் அதை வாங்கவும் ஆர்வம் காட்டுவோர் உண்டு.

  Read More: ரூ 24.50 கோடி மதிப்பிலான சான்றிதழ்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் வீண்.. கணக்கு தணிக்கை அறிக்கையில் வெளியான தகவல்

  ஒட்டுமொத்தமாய் வழக்கம் போலவே இந்த ஆண்டும் ஒரு பக்கம் பட்டுப் புடவைகள் என்றால் மறுபக்கம் சல்வார் ஃப்ராக் போன்ற பல்வேறு உடைகள் தீபாவளிக்கு பெண்களுக்கான புதுவரவாய் சந்தையில் மிளிர்கின்றன.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Deepavali, Diwali, Dresses