திருவள்ளூரில் கழிவுநீர் கால்வாயிலிருந்து பிறந்து சிலமணி நேரமே பெண் குழந்தை மீட்பு.. அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிப்பு..

திருவள்ளூரில் கழிவுநீர் கால்வாயிலிருந்து பிறந்து சிலமணி நேரமே பெண் குழந்தை மீட்பு.. அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிப்பு..

பிறந்த குழந்தை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கழிவுநீர் கால்வாயில் பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம் கிராமத்தில் மின்சார அலுவலகம் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயில் பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை கிடப்பதை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்த ஊராட்சிமன்ற தலைவர் பாபு மற்றும் வார்டு உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பச்சிளம் குழந்தையை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

  இதையடுத்து அங்கு மருத்துவர்கள் பச்சிளம் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். காலை நேர பனியில் வெட்ட வெளியில் வீசப்பட்டதால் குளிர்ந்த நிலையில் இருந்த குழந்தையின் உடல் வெப்பத்தை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பிரசவ வார்டில் இருந்த ஒரு இளம்தாய் மூலம் அந்த குழந்தைக்கு உடனடியாக தாய்பால் கொடுக்கப்பட்டது.

  மேலும் குழந்தைகள் நல காப்பகத்திற்கும், காவல்துறைக்கும் மருத்துவமனை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்று போலியோ தடுப்பு தினம் என்பதால் அந்த பச்சிளம் குழந்தைக்கு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்தும் கொடுக்கப்பட்டது. சிகிச்சையை தொடர்ந்து இந்த பச்சிளம் குழந்தை குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

  இந்த குழந்தையின் பெற்றோர் யார், பிறந்தது பெண்குழந்தை என்ற காரணத்தால் யாராவது அந்த குழந்தையை கால்வாயில் வீசி சென்றனரா? அல்லது கள்ளத்தொடர்பு ஏதேனும் காரணமாக இருக்குமோ என்ற கோணத்தில் பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மேலும் படிக்க...தமிழகத்தில் பிப்ரவரி 8 முதல் கல்லூரிகள் திறப்பு

  பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் பெண்குழந்தை கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: