• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வங்க கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி... மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு

வங்க கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி... மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு

சென்னையில் கனமழை

சென்னையில் கனமழை

வங்கக் கடலில் வரும் 13-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் அதி தீவிர மழைப் பொழிவு இருக்கக் கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். அதற்கேற்றார் போல நேற்று இரவு தொடங்கி கன மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை நகரம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஆங்காங்கே மழை நீர் வீடுகளுக்குள் புகுந்திருப்பதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்துள்ளனர்.

    இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தென்மண்டல தலைவர் பாலசந்திரன், தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 100கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்ட கரையோர பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 40-45கி.மீ வேகத்தில் வீசும்.

    அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் என்றார்.  மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற தற்போதைய நிலையில் வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்தார்.

    இதனிடையே தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வரும் 13-ஆம் தேதி ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்றும் இது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 48 மணி நேரத்தில் வலு பெறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: