ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழக புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேர் இன்று உறுதிமொழி ஏற்பு!

தமிழக புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேர் இன்று உறுதிமொழி ஏற்பு!

சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு

சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு

திமுக சார்பில் அமைச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர்( குன்னம் ), மதிவேந்தன்( ராசிபுரம்) மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் காந்திராஜன்( வேடசந்தூர்), வரலட்சுமி( செங்கல்பட்டு), வெங்கடாசலம்( அந்தியூர்) ஆகியோர் பதவியேற்றனர்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தமிழகத்தில் இதுவரை பதவியேற்காத 10 புதிய சட்டமன்ற உறுப்பினர்களில் 9 பேர் இன்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

  தமிழகத்தின் 16வது சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றிபெற்றதையடுத்து கடந்த 7ம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றுகொண்டார். இதேபோல், அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கடந்த 11ம் தேதி துவங்கி இரண்டு நாட்கள் நடைப்பெற்றது.

  அந்த கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தற்காலிக பேரவை தலைவர் கு.பிச்சாண்டி முன்னிலையில் சட்டப்பேரவை உறுப்பினர்களாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அன்றைய தினம் 223 சட்டமன்ற உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

  மேலும், பதவியேற்காத 6 திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், 4 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் என மொத்தம் 10 உறுப்பினர்களில், 9 பேர் பேரவைத் தலைவா் அப்பாவு முன்னிலையில் சென்னை தலைமை செயலகத்தில் சட்டப் பேரவை உறுப்பினா்களாக  இன்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

  திமுக சார்பில் அமைச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர்( குன்னம் ), மதிவேந்தன்( ராசிபுரம்) மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் காந்திராஜன்( வேடசந்தூர்), வரலட்சுமி( செங்கல்பட்டு), வெங்கடாசலம்( அந்தியூர்) ஆகியோர் பதவியேற்றனர்.

  அதிமுக சார்பில் வைத்திலிங்கம்( ஒரத்தநாடு) சி.விஜயபாஸ்கர்( விராலிமலை) கடம்பூர் ராஜூ(கோவில்பட்டி) இசக்கி சுப்பையா(அம்பா சமுத்திரம்) ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்.

  சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் திமுக ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மட்டும்  பதவியேற்கவில்லை. புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், துணை சபாநாயகர் பிச்சாண்டி, சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Murugesh M
  First published:

  Tags: ADMK, DMK, MLA, TN Assembly