ஆவின் பால் வாங்குவதற்கு மீண்டும் புதிய விண்ணப்பங்களை தர வேண்டும்- ஆவின் நிறுவனம் அறிவிப்பு

மாதிரிப்படம்

ஏற்கனவே பால் வாங்க கூடியவர்களும் புதிதாக பால் வாங்க வேண்டும் என வருபவர்களின்  தகவல் விவரங்களை முழுமையாக அளிக்க வேண்டும்.

  • Share this:
ஆவின் பால் விலை குறைப்பிற்கு பிறகு கூடுதலாக இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட புதிய வாடிக்கையாளர்கள் ஆவின்பால் வாங்குவதற்கு முன் வந்து உள்ளனர். இதனால் ஆவின் பாலில் புதிய வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருவதால் போலி முகவர்களும் பால் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தனியார் பாலைவிட விட ஏழு ரூபாய் அளவிற்கு வித்தியாசம் கொண்டது ஆவின் பால்.

இதனால் ஆவின் பால் தினசரி கிடைத்தாலும் குறைந்த விலையில் வாங்குவதற்கு மாதாந்திர அட்டை பயன்படுத்தியே வாங்கிக்கொள்ள முடியும். கடைகளில் பால் இருந்தாலும் கூட அது மாதாந்திர பால் வாங்குபவர்களுக்கு கிடைக்கும் சலுகையும் கிடைக்காது. அதாவது நீங்கள் கடைகளில் சென்று ஆவின் பால் வாங்கினால் அதில் ஒரு ரூபாய் முதல் 1.50 காசு  வரை கூடுதலாக விற்பனை செய்யப்படும்

இதனால் ஏழை எளியவர்கள் மாதாந்திர கட்டணம் செலுத்தி ஒரு மாதத்திற்கான பாலை முன் பதிவு செய்து வைத்துள்ளார்கள். கடந்த பல ஆண்டுகளாக ஏராளமான போலி முகவர்கள் தங்கள் சரியான விவரங்களை தராமல் தினசரி பல லிட்டர் பால் முகவராக அல்லாதவர்களுக்கு சென்றடைந்தாக தகவல் கிடைத்துள்ளது. அந்த அடிப்படையில் ஏற்கனவே பால் வாங்க கூடியவர்களும் புதிதாக பால் வாங்க வேண்டும் என வருபவர்களின்  தகவல் விவரங்களை முழுமையாக அளிக்க வேண்டும்.

Also Read : கொரோனா காலத்தில் தமிழ்நாட்டில் 188 போலி மருத்துவர்கள் கைது!

குறிப்பாக ஆதார் விவரங்கள், பிறந்த தேதி, முகவரி , வீட்டில் எத்தனை நபர்கள் உள்ளனர் எத்தனை பால் பாக்கெட்டுகள் வாங்கப்படுகிறது, சிறியவர்கள், பெரியவர்கள், தொலைபேசி எண், எந்த பகுதியில் பால் வாங்கப் படுகிறது உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அந்த விண்ணப்பத்தில் இடம்பெற்றுள்ளது

இதன் மூலம் சரியாக எத்தனை நபர்கள் பால் வாங்குகின்றனர். மேலும் போலி முகவர்களாக யாரெல்லாம் பால் வாங்குகின்றனர் என்ற விவரங்களை விரைவில் திரட்டி நடவடிக்கைகள் எடுக்க உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். மூன்று ரூபாய் விலை குறைப்புக்கு பிறகு கூடுதலாக 1.5 லட்சம் பொதுமக்கள் ஆவின்பால் வாங்கி பயன் அடைகின்றனர்.

Also Read : தமிழக அரசின் பாடத்திட்டத்திலும் ஒன்றிய அரசு என்று மாற்றி அச்சிடப்படும் - லியோனி

இதன் மூலம் தற்பொழுது 26 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு 2 கோடியே 50 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் ஒரு கோடியே 50 லட்சம் லிட்டர் பால் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. மீதமுள்ள பால் மதிப்பு கூட்டப்பட்ட 150 வகை பால் பொருட்களாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதில் குறிப்பாக ஆவின் நிறுவனத்திற்கு மற்றும் தினசரி 36 லட்சம் லிட்டர் பால் பெறப்பட்டு அதில் 26 லட்சம் லிட்டர் பால் தற்போது பொதுமக்கள் பயனடையும் வகையில் தினசரி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட தமிழக அரசு ஆவின் பால் விலையை மூன்று ரூபாய் குறைத்தது இதனால் தினசரி 85 லட்சம் ரூபாய் ஆவின் நிறுவனத்திற்கு இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: