Home /News /tamil-nadu /

6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவை தற்போது சுழற்சி முறையில் செயல்பட்டு வருகின்றன.

கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவை தற்போது சுழற்சி முறையில் செயல்பட்டு வருகின்றன.

கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவை தற்போது சுழற்சி முறையில் செயல்பட்டு வருகின்றன.

    கொரோனா பரவல், அண்டை மாநிலங்களில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் பாதிப்பு ஆகியவற்றை கவனத்தில் கொண்டு தமிழக அரசு கொரோனா கட்டுப்பாடுகள் குறித்த புதிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. இதன் விபரம் பின்வருமாறு-

    - கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், பரவி வரும் உருமாறிய கொரோனா – ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும், பொது மக்கள் நலன் கருதியும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் 31.12.2021 வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது.

    - சமுதாய, கலாச்சார, அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும்

    - கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், 31.12.2021 மற்றும் 1.1.2022 ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை.

    - அனைத்து நீச்சல் குளங்களும் செயல்பட அனுமதிக்கப்படும்.

    - அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் அனைத்திற்கும் கூட்ட அரங்குகள் பயன்படுத்த அனுமதிக்கப்படும்.

    Also Read : கடும் எதிர்ப்பு எதிரொலி: சி.பி.எஸ்.இ வினாத்தாளில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கேட்கப்பட்ட கேள்வி நீக்கம்

    - தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கின் காரணமாக பல மாதங்களாக பள்ளிகளுக்கு செல்லாததனால் மாணவர்களிடையே கற்றல் திறன் குறைந்துள்ளதையும், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், 03.01.2022 முதல் அனைத்து உயர்நிலை / மேல்நிலை பள்ளிகள் (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மட்டும்), அனைத்து கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள் சுழற்சி முறை இன்றி இயல்பாக செயல்படும்.

    - கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் (hand sanitizer with dispenser) கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் (thermal screening)

    - கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

    Also Read : தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு: எதற்கெல்லாம் அனுமதி?

    - அனைத்து கடைகளும், குளிர் சாதன வசதி இல்லாமல் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.

    - கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.
    Published by:Musthak
    First published:

    Tags: School

    அடுத்த செய்தி