முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மாற்றுத்திறனாளி மட்டும் போதும்... குறையை குறிப்பிடக் கூடாது... வந்தது புதிய அறிவிப்பு..!

மாற்றுத்திறனாளி மட்டும் போதும்... குறையை குறிப்பிடக் கூடாது... வந்தது புதிய அறிவிப்பு..!

தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசு

தனிப்பட்ட குறையைச் சுட்டிக்காட்டி, அதன் மூலம் நவீன தீண்டாமையை கடைப்பிடிப்பதைத் தடுக்கும் வகையில் இந்த புதிய சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பல்கலைக்கழக சட்டத்தில் தமிழ்நாடு அரசு  புதிய திருத்தம் கொண்டுவந்துள்ளது. அதன்படி, காது கேளாதோர், வாய் பேச முடியாதோர், தொழுநோயாளி போன்ற வாக்கியம் இனி மாணவர் சேர்க்கையில் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்குப் பதிலாக மாற்றுத்திறனாளிகள் என்று மட்டும் குறிப்பிட்டால் போதும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட குறையைச் சுட்டிக்காட்டி, அதன் மூலம் நவீன தீண்டாமையை கடைப்பிடிப்பதைத் தடுக்கும் வகையில் இந்த புதிய சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதன் மூலம் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின் போதே இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படுவது தவிர்க்கப்படும். இனி மாற்றுத்திறனாளிகள் என்று மட்டும் குறிப்பிட்டே விண்ணப்பங்கள் பதிவு செய்தல், தேர்வுக்கான சலுகைகள் கோருதல் போன்றவை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Tamil Nadu, University