ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இல்லத்தரசிகளுக்கு குட் நீயூஸ்..! 3 மாசம் ஆனாலும் கெட்டுப்போகாத ஆவின் பால் அறிமுகம் - இனி அதிகாலையில் எழுந்திருக்க வேண்டாம்

இல்லத்தரசிகளுக்கு குட் நீயூஸ்..! 3 மாசம் ஆனாலும் கெட்டுப்போகாத ஆவின் பால் அறிமுகம் - இனி அதிகாலையில் எழுந்திருக்க வேண்டாம்

ஆவின் அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஆவின் டிலைட் பால்

ஆவின் அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஆவின் டிலைட் பால்

தொழில்நுட்பத்துடன் பேக்கிங் செய்யப்படுவதால்தான் இந்தப் பால் நீண்ட காலம் கெட்டுப் போகாத வண்ணம் உள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  3 மாதங்களுக்கு கெட்டு போகாத அளவுக்கு ஆவின் டிலைட் (Aavin Delite) புதிய பால் வகைகளை ஆவின் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

  தமிழகம் முழுவதும் தினசரி 40 லட்சம் லிட்டர் பாலை ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கிறது. இந்தப் பால் சமன்படுத்தப்பட்ட பால் (நீலம்), நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை), நிறை கொழுப்பு பால் (ஆரஞ்சு), இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (மெஜந்தா) மற்றும் டீமேட் (சிவப்பு) போன்ற வகைகளில் தினசரி 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

  இந்த நிலையில் 3 மாதங்களுக்கு கெட்டு போகாத அளவுக்கு ஆவின் டிலைட் (Aavin Delite) புதிய பால் வகைகளை ஆவின் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இதை 90 நாட்களுக்கு சேமித்து பயன்படுத்தலாம். கெட்டுப் போகாது. இந்த ஆவின் டிலைட் பாலில் ஆவின் டிலைட்டில் 3.5 சதவீத அளவுக்கு கொழுப்பு இருக்கும். 0% பாக்டீரியா. இந்தப் பாலை வாங்கியவுடன் சூடு செய்து பயன்படுத்தலாம். நீண்ட தூரம் பயணம் செய்வோருக்கு இது ஏற்றதாக இருக்கும்.

  ஆவின் டிலைட் பால் பாக்கெட்டின் விலை 500 மில்லி லிட்டர் 30 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கிரீன், ஆரஞ்ச் போன்ற ஆவின் பாக்கெட்களை விட இது விலை அதிகம் என்றாலும் நீண்ட காலம் பயன்படுத்தலாம் என்பதால் இதன் விலை சற்று அதிகமாக உள்ளது. எனினும் இதன் அம்சம் வாடிக்கையாளர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.  (ultra-high temperature) தொழில்நுட்பத்துடன் பேக்கிங் செய்யப்படுவதால்தான் இந்தப் பால் நீண்ட காலம் கெட்டுப் போகாத வண்ணம் உள்ளது.

  இதையும் படிங்க: சென்னை வந்துவிட்டு ஸ்டாலினை சந்திக்காமல் போக முடியுமா? - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி கலகல பேட்டி

  நீண்ட தூரப் பயணம் மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் இந்த வகை பால் பாக்கெட் பெரிய அளவிலான பலனை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழை வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் பாலுக்காக மக்கள் இன்னல் படுவது தவிர்க்கப்படும் எனவும் பால் பவுடரை விட இந்த பாலை பயன்படுத்துவது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். 3.5 சதவீத கொழுப்பு மற்றும் ஜீரோ சதவீத பாக்டீரியா உடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது இந்த ஆவின் டிலைட்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Aavin, Milk